பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

விடுதலை வீரர்கள் ஐவர்

இத்தரை குடைந்து மெத்தவும் உழன்று

பத்தரை மாற்றைப் பெற்றபின் அதனைக்

கைத்திறம் காட்டி அணிநகை பூட்டிச்

சித்திரப் பெண்டிர் களித்திட வின்றிக்

குப்பைக் குழியில் போடுதல் நன்றோ?

புட்கள் ஆகிவிடும் சோலையின் நடுவே

முட்கள் கீறிடப் பறித்த நல்ரோசா

அட்கம் ஏந்திய வீரர் முடியில்

வெட்கம் எத்திய மாதர் குழுவில்

இருந்திடல் மணமா?

குட்டம் கொண்டோர் குறுகிய கையில்

கொடுத்திடல் நலமா?

பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்

பெற்ற மறவர்க்குப் பெருமைகள் சேர்ப்போம்

உற்றார் - சுற்றம் ஒருவர் - இருவர்

உயர்வுடன் வாழ்தல் சுதந்திரம் ஆமோ ?

கற்றம் - கல்லார் - கழனியில் உழல்வோர்

கீற்றார்: - கொல்லர் - சிறுதொழில் செய்வோர்

மாதர் நல்லார் மாணவமணிகள்

தீதறு வாழ்வில் திளைத்தலே சுதந்திரம்.

இந்தக் கொள்கை இனிது விளங்க

மத்தக் கொள்கை பாய்ந்து விலக

சந்தத் தமிழ் ஒலிப்போம் இன்று

தங்கக்குன்றே! தமிழே! தாயே! உன்

சிங்கப் புதல்வரின் சிறப்பினைச் சொன்னோம்

எங்கும் தமிழகம் வெற்றி விளைத்திட

இங்கு நீ எமக்கே அருள்வாய் அம்மா.

வணக்கம்!
வாழ்க!