பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறுவேட விருந்து அல்லது (சபாபதி ஐந்தாம் பாகம்) நாடக பாத்திரங்கள் சபாபதி முதலியார் சபாபதி (வேலையாள்) கிருஷ்ணசாமி;முதலியார் குமரகுரு முருகேசம் நரசிம்மாச்சாரி இன்னும் பத்து பன்னிரண்டு சிநேகிதர்கள் தந்தி:ஆபீஸ் பியூன். முதல் அங்கம் முதற் காட்சி இடிம்-சபாபதி முதலியார் விங்டில் ஒர் அறை. சபாபதி முதலியார், கிருஷ்ணசாமி, குமரகுரு, முருகேசம் நரசிம்மாச்சாரி, முதலிய சிநேகிதர்களெல்லாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். ச. மு. அப்பொழுது இந்த பான்சி டிரெஸ் (Fancy dress( பார்டியை வருகிற சனிக்கிழமை சாயங்காலம் வைத் துக் கொள்ளலாம் பிரதர்ஸ்-நீங்களெல்லாம் என் னென்ன வேஷத்தில் வரப்போகிறீர்கள் ? சொல் லுங்கள். . கி. இருங்கள் இருங்கள்!-ஒருத்தரும் ஒன்றும் சொல்லா தீர்கள்!-எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறதுஅத்தான், அன்றைக்கு நம்முடைய புத்திசாலி சபா பதியை - மெத்தைபடியருகில் காவலிருக்கச் சொல் லுங்கள், அன்றைக்கு யாராவது வேஷம் போட்டுக்