உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடையவன் விடைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விடையவன் விடைகள்

வடமொழியில் ஏறி, மீனம் தாமரஸம் என்று வழங்குகின் றன என்று மொழி நூல் அறிஞர்கள் ஒப்புக்கொள்கின் றனர்.

111. பாலம் என்பது தமிழ்ச் சொல்லா ?

உருதுச் சொல்லிலிருந்து வந்தது; நெருப்பாறு மயிர்ப் பாலம்’ என்று தமிழில் நெடுங்காலமாகப் புகுந்து வழங்கு கிறது.

112, கொய்யாக் கனி என்ற பெயர் அக் கணிக்கு ஏன் ஏற்பட்டது ? பிறரால் கொய்யப்படாது தானே முற்றி விழும் கனி என்பதனுலா ?

கொய்யாக்கனி பிரேஸில் நாட்டிலிருந்து வந்தது. அங்கே அதைக் கொயாபா (Guayaba) என்று வழங்குவார்கள். அதுவே திரிந்து கொய்யா ஆயிற்று.

113. பதப்பர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? அது எங்காவது இலக்கியத்தில் வந்திருக்கிறதா ? -

வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை என்பது பொருள்: பலசூழ் பதப்பர் பரிய என்று பதிற்றுப்பத்தில் வருகிறது. . . . . . . -

114. பண்பாடு என்ற தமிழ்ச் சொல் ஆங்கிலச் சொல் லான கல்ச்சரைக் (Culture) குறிக்க வழங்குகிறதே; அது பண்பு என்பதிலிருந்து வந்ததா, அன்றிப் பண்படுவது என்பதி லிருந்து வந்ததா ? ... . . . . . . . . . . . . . . -

கல்ச்சர் என்ற சொல்லுக்கு ஏற்ற சொல் வேண்டு. மென்று படைக்கப்பட்ட சொல் பண்பாடு என்பது. இதனை முதலில் வழங்கியவர் ரசிகமணி டி. கே. சி. அவர்கள் என்று நினைக்கிறேன். பண் என்பது நிறைவு அல்லது செப்பம் என்னும் பொருளுடையது. நிலத்தைப் பண்படுத்தல் என்று