இலக்கண இலக்கியம் - 87
331. பிரபந்தத் திரட்டு என்ற இலக்கண நூல் ஒன்று இருப்பதாகச் சொல்கிருர்களே; அச்சில் இருக்கிறதா ? பல பிரபந்தங்கள் கொண்ட திரட்டைத்தானே அப்படிச் சொல்வது வழக்கம் ? .
பொதுவாக, ஒரு புலவர் இயற்றிய பிரபந்தங்களின் தொகுப்பை அவர் பெயரோடு சார்த்தி இன்னுருடைய பிரபந்தத் திரட்டு என்று சொல்வது இக்கால வழக்கம், சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத்திரட்டு என்பது போல. ஆனல் பிரபந்தத்திரட்டு என்பது பிரபந்தங்களின் இலக் கணத்தைத் தொகுத்துக் கூறுவது. இன்னும் அச்சாகவில்லை திருவான்மியூரில் உள்ள டாக்டர் உ. வே. சாமிநாதையர வர்கள் நூல் நிலையத்தில் இருக்கிறது. -
332. துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய சோணசைல மாலே என்ற நூல் எதனைப் பற்றிக் கூறுகிறது ?
திருவண்ணுமலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பற்றிய நூறு பாடல்கள் அடங்கிய நூல் அது. சோணசைலம் என்பது திருவண்ணுமலைக்கு ஒரு பெயர். ஒவ்வொரு பாட்டும், சோணசைலனே கைலே நாயகனே' என்று முடியும், சிவப்பிரகாச சுவாமிகள் திருவண்ணுமலையை ஒரு முறை வலம் வருவதற்குள் இந்த நூலைப் பாடி முடித்தாராம்.
333. வைணவ ஆழ்வார்கள் பாடிய நாலாயிரதிவ்ய பிரபந்தத்தை நாதமுனிகள் தொகுத்தமைத்தார் என்கிருர்கள். தேவார திருவாசகத்தைத் தொகுத்து வெளியிட்டவர் யார்?
நம்பியாண்டார் நம்பி என்பவர் தொகுத்து வகுத்து. அமைத்தார். தேவாரத்தை ஏழு திருமுறைகளாகவும், திருவாசகம், திருக்கோவையார் என்ற இரண்டையும்