பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

新 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ ஆன்ழெல் நீ இப்பொழுது அவனுடன் பேசிக்கொண் டிருந்தாயல்லவா? அவனோடு இருந்தானே மற். றொருவன் அவன் யார்? திஸ்ப் : அவனா-அவன் என் அண்ணனின் நண்பன் .. அனாபெஸ்தோ கலியோபா ஆன்ழெல் : உன் சகோதரனின் பெயரென்ன்? திஸ்ப் : ரொதொல்போ-கோமானே! ரொதொல்போ அவன் பெயர். இருபது தடவைக்கு மேல் இதையெல் வாம் பற்றி உங்களிடத்தில் விளக்கியாயிற்று. மீண்டும். மீண்டும் இதையே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதை விடச் சுவையானது என்னிடம் கேட்பதற்கோ, சொல்வதற்கோ வேறு எதுவும் இல்லையா? எப். பொழுதும் இதைப்பற்றித்தானா கேள்வி? ஆன்ழெல் : தீஸ்ப்! கோபித்துக்கொள்ளாதே-இனிமேல் உன்னை எதுவும் கேட்கமாட்டேன். அடடா! நேற்று நீ ஆடிய ஆட்டமும் பாடிய பாட்டும் என்ன இனிமை யாக இருந்ததுதெரியுமா? இந்த இத்தாலிநாடு முழுதும், உன்னைப் போற்றுகிறது; புகழ்கிறது. ஒவ்வொருவர் நாவிலும் உன் குரலின் இனிமையும், உன் நடனக் கலையின் உயர்வுமே நடமாடுகின்றன. தீஸ்ப்-இந்தப் பது நகரத்து மக்களைப்பற்றி நீ இவ்வளவு குறை. கூறினாயே-அவர்கள் எல்லாம்-அந்தக் கூட்ட்ம் முழுமையும் உன்னுடைய ஒவ்வொரு ஆட்டத்து இறுதி யிலும் எப்படிக் கைதட்டினார்கள் தெரியுமா? அவர்கள் மகிழ்ச்சியைக் கூச்சலிட்டுக் காட்டிய போதெல்லாம் என் மனம் உடைந்தேவிட்டது. அவர்கள் கண்களுக்கெல்லாம் நீ இன்பக் காட்சியாய்த் தோன்றத்தோன்ற எனக்குப் பொறாமையாக இருக் கிறது நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா? அந்தக் கண்களெல்லாம் உன்னையே மொய்த்துக் கொள்கின்றன. அத்தனை பேரும் உன் குரலிசையை