பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களம்-13 (தீஸ்ப் : கத்தேரினா கட்டிலில் பிணம் போலக் கிடக் கிறாள்.) - - திஸ்ப் : இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை யென்று நினைக்கிறேன். அவளுக்குச் சாவத் துணி வில்லை, காதலிக்கப்பட்ட பிறகு யாருக்குத்தான் சாவ மனம் வரும். காதல் இல்லை என்றால் யாருக்குத் தான் வாழ மனம் வரும் . - - (கட்டில் பக்கம் திரும்பி) நீ மகிழ்ச்சியாக சாவாய் அல்லவா? என் தலை வெடித்துவிடும்போல் இருக்கிறது. இந்த மூன்று இரவாக நான் துரங்கவே இல்லை. முந்தியநாள் இரவு விழா, நேற்று உங்கள் திருட்டுச் சந்திப்பைக் கண்டுபிடித்தேன். இன்றைய இரவு... நாளைக்காவது தூங்குவேனோ என்னவோ (நாடக அரங்கை நான்கு பக்கமும் பார்க்கிறாள்). எல்லோரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். கை தட்டுகிறார் கள். இந்த நடனம் நன்றாக இருக்கிறது. அந்த இசை இனிமையானது என்கிறார்கள். அறிவற்றவர்கள். அடடா! என்ன அழகு! என்ன நடிப்பு! என்ன நொடிப்பு என்றெல்லாம் புகழ்கிறார்கள். பூமாரி சொரிகிறார் கள். ஆனால் உள்ளம் ஒடிந்து உதிரம் சொட்டுவதை அவர்கள் உண ர் வ. தி ல் ைல. ரொதோல்போ! ரொதோல்போ! நீ இன்றேல் எனக்கு வாழ்வில்லை. விளக்குக்கு எண்ணெய்-விளைநிலத்திற்கு மழைஎப்படியோ அப்படி நீ எனக்கு. நான் இறந்தால் உன் அருகிலேயே இறக்கவேண்டும். உன் எண்ணத் திலிருந்து என் நினைவைப் பிரிக்கமுடியாத வகையிலே இறக்கவேண்டும். மற்ற பெண்கள்ோடு இன்பமாக இருக்கும் போதுகூட என் நிழல் உன் அருகில் பிரியா திருக்கின்ற நிலையிலே இறக்கவேண்டும். உனக்காக இறக்கவேண்டும். உன் நன்மைக்காக இறக்கவேண்டும். மு-7