பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 1 03 ரொதோல் : சரி இங்கு யாரும் வரவேண்டாமென்று கட்டளை இடு. - திஸ்ப் : அது முன்னமே இடப்பட்டுள்ளது. இங்கு யாரும் வரமாட்டார்கள். (ரொதோல்போ அங்குள்ள கதவு களையெல்லாம் மூடித் தாளிடுகிறான்) . ஏதோ சொல்லவேண்டுமென்றாயே சொல்லேன். - ரொதோல் : நீ எங்கிருந்து வந்தாய்? எதற்காக இப்படி உன் முகம் வெளுத்திருக்கிறது? இன்றைக்கெல்லாம் நீ என்ன செய்தாய்? சொல்-இந்தக் கைகள் என்ன செய்தன. சொல் - சொல் நீ சொல்லமாட்டாய் அல்லவா? நான் சொல்லுகிறேன் - மறைக்காதேசாக்குப்போக்குத் தேடாதே. எனக்கு எல்லாம் தெரியும். இதோ இந்தக் கதவிற்கு மறுபுறம் தப்ன் இருந்தாள். அவள் இங்கு நடந்ததெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். ஒரு வார்த்தை கூட விடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். நீ சொன்னதை அப்படியே சொல்கிறேன், கேள். சர்வாதிகாரி என்னிடம் நஞ்சில்லை என்றார். நீ சொன்னாய்-என்னிடம் இருக்கிறது - நீ சொல்ல வில்லையா-உண்டு இல்லை என்று சொல். பொய் சொல்லாதே! உன்னிடம் நஞ்சு இருந்ததல்லவா! இதோ என்னிடம் குத்துவாள். (மார்பில் மறைத்து வைத்திருந்த குத்துவாளை எடுக்கிறான்.) . . ; திஸ்ப் நீ என்னைக் கொல்லப்போகின்றாய். அதுதானே இந்த எண்ணம்தான் உனக்கு வந்ததோ-நல்லது - அப்படியே செய் என்ன நடந்தது. எது உண்மை, எது பொய் என்பதெல்லாம் தெரிந்து கொள்ளாமல் என்னைக் கொலை செய்ய நினைக்கிறாய். அவ்வளவு இழிந்தவளாகக் கருதப்பட்டேன் நான். மற்றொருத்தி யின் காதலுக்காக என்னைக் கொல்லப்போகின்றாய்,