பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ காலடியிலேயே இறக்கவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்காக என்ன செய்வது என்று கூட வழி தேடினேன். உன் கையால் இறிப்பது நான் நினைத்ததைவிட எத்தனையோ பங்கு மேலானது - இன்பமானது நீ விரும்பிக் கேட்காவிட்டாலுங்கூட என் கடைசிமூச்சு-பேச்சுக்களையாவது உன் செவிகள் கேட்கும். அதுவே போதுமானது. நான் வாழவேண்டு. மென்ற ஆசை எனக்கில்லை. நீ என்னைக் காதலிக்க வில்லை-எனக்கேன் இந்த வாழ்வு ! கொன்றுவிடு. என் அன்பே ரொதோல்போ இப்பொழுது நீ எனக்காகச் செய்யப்போவது- செய்யக் கூடியது அது ஒன்றேதான் அல்லவா-ஆம் நடக்கட்டும் கொன்று விடு. - - ரொதோல் : திஸ்ப்..செய்த தவறையெல்லாம் நீயே ஒத்துக்கொள்... . திஸ்ப் : நான் சொல்கிறேன் கேள்...இன்னும் ஒரே ஒரு வினாடி கேள். என்னுடைய வாழ்வே அப்படித்தான். இது வெறும் வார்த்தை அலங்காரமல்ல. உடைந்த இதயத்தின் குமுறல். எங்களைப்பற்றி எல்லாம் மற்றவர்களுக்கு இரக்கம் இருக்காது. எங்களிடத்திலே கடமையும், தைரியமும் அன்பும் இருக்குமென்பதை நம்பமாட்டார்கள். நான் இன்னும் வாழத்தான் விரும்புவதாக நினைக்கிறாயா நினைத்துப்பார். நான் சிறுமியாக இருக்கும்போது பிச்சை எடுத்து வயிறு வளர்த்தேன்-பதினாறு வயது வரையில் எனக்கு உணவுண்டா? உடைஉண்டா? கண்டகண்ட செல்வர்களுக்கு விளையாட்டுப் பொருளாக இருந்து, இவனிடத்தில் சிலநாள், அவனிடத்தில் சிலநாள்இதுதானே என் வாழ்க்கை. ஆனால் இன்றே கலா ராணி கண்கவரும் ஒவியம்-குயில் மயில் இன்னும் என்னென்னவோ சொல்கின்றனர். செல்வமும் அழகும் இருப்பதால் எத்தனை கோமான்கள்