பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 9 வாயைப் பிளந்து சந்தடி இன்றிக் கேட்கின்றனர். அவர்கள் கண்களுக்கு இனிய விருந்தாக இருக்க, இருக்க என்னைப் பொறாமை பிடுங்கித் தின்கிறது. ஐயம் வளர்கிறது. போகட்டும். இன்று மாலை கதவருகில் அந்த முகமூடி அணிந்த மனிதனோடு பேசிக் கொண்டிருந்தாயே, அந்த மனிதன் யார்? திஸ்ப் : தீஸ்ப் கோபித்துக் கொள்ளாதே இனிமேல் உன்னை எதுவும் கேட்க மாட்டேன்' இப்படிச் சொல்லி இன்னும் சிறிது நேரம்கூட ஆகவில்லையே? நன்றாக இருக்கிறது ஐயா உங்கள் வாக்கு! அந்த மனிதன்-விர்ழிலியோதஸ்கா. ஆன்ழெல் : என் படைத்தலைவனா? திஸ்ப் : உங்கள் ரகசியப் போலீஸ் தலைவன்-அவர் தானே வேனிஸ் குடியரசின் ஒற்றன்? ஆன்ழெல் : அவனிடத்தில் உனக்கென்ன வேண்டி யிருக்கிறது? திஸ்ப் : உங்களிடத்தில் அதைச் சொல்லவில்லை. சொன்னால் உ ங் க ளு க் கு வருத்தமுண்டாகும், ஐயமுண்டாகும். அல்லவா? ஆன்ழெல் : தீஸ்ப். திஸ்ப் : இதைக் கேளுங்கள். நான் உண்மையைச் சொல் கிறேன் நான் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா? மக்களுக்குச் சொந்தமான ஓர் ஏழைப்பெண் நான். நாடோடி நடிகை . இன்றைக்கு உங்களால் விரும்பப் பட்டு நாளைக்குக் கைவிடப்படும் பொருள். ஒரு விளையாட்டுப் பொம்மை நான் இவ்வளவு கீழ்மை யாக இருந்தாலுங்கூட எனக்கொரு தாய் இருந்தாள். ஆம் தாய்-தாய் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தாய் இருந்ததுண்டா?