பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நாடகம்... உயிரினும் மேலானது காதல் என்பது இந்த நாடகத்தின் கருவாக (Theme) விளங்குகிறது. சர்வாதிகாரி (ஆன்ழெல்லோ), நடனப் பெண் (தீஸ்ப்), பாடகன் (ரொதோல்போ) எனும் இம் மூவரின் காதல் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை இந்நாடகம் விவரிக்கிறது. சர்வாதிகாரி நடனப் பெண்ணை விரும்புகிறாள். நடனப் பெண்ணோ, பாடகனை விரும்புகிறாள். ஆனால் பாடகனோ அரசியை விரும்புகிறான். சர்வாதிகாரி, நடனப் பெண் இருவரின் காதலும் நிறைவேறாமல் - போகின்றது. பாடகனும் அரசியும் (இளவயதுக் காதலர்கள்) கருத்தொருமித்த காதலர்களாக - இருந்தபோதும் சமுதாயம் அவர்களை இணைய விடாமல் தடுக்கிறது. இறுதியில் இந்தக் காதலர் கள் நடனப் பெண்ணின் உதவியால்-உயிர்த் தியாகத்தால் கோட்டையிலிருந்து தப்பித்து நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். sai Gomarai Graphic Madras-5. Phone: 844554.