பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魔鲁 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ போகட்டும். பிள்ளை என்றால் என்ன என்றுதான் உங்களுக்குத் தெரியுமா? ஏழை-உணவின்றி, உடை யின்றி மெலிந்து உற்றார் உறவினரின்றி-உங்கள் அருகில்- நீங்கள் நடக்கும் போது உங்களோடே நடந்து, நிற்கும்போது உடன் நின்று, -உங்களைச் சுற்றி-உங்கள் அருகில்-அழும்போதெல்லாம் ஆறுதல் மொழி கூறி, சிறுநகை காட்டி நிற்கும்...ஒரு பெண்... இல்லை ஒரு பெண்ணல்ல-ஒரு தெய்வம்... உங்களையே உயிரெனப் பாதுகாத்து மழலை மொழி கேட்டு மகிழ்ந்து, தலைமுடி திருத்திஉம் செவ்விதழிலே சிரிப்பை வரவழைத்துப் பழக்கி, அன்பை ஊட்டி அன்பை வளர்த்து-உம் உடலை அவள் மடியில்-உம் விரல்களை அவள் உள்ளங்கையில்-உம் உயிரை அவள் இதயத்தில் பொறுத்திச் சூடேற்றிய செம்பொருள் ! குழவியாக இருக்கும்போது தன்பாலூட்டி வளர்ந்தபோது உணவும் உயிரையும் ஊட்டிய.அந்தத் தெய்வத்தைத் தான் உங்கள் உதடு என் தாய்! என் தாய்!” என்னும் அவளும் என் பிள்ளை1’ என்பாள். அடடா! எவ்வளவு இனிமையான சொற்கள் இந்த இரண்டு. சொற்களும்? எனக்கும் ஒரு தாய் இருந்தாள். அவள் ஒர் ஏழைப் பெண். அவள் கணவன் பிரேசியாவில் பொது இடங் களில் ஏதாவது பாட்டுப் பாடுவான். நான் அவளோடு செல்வேன். ஏதாவது காசுகள் கிடைக்கும். இப்படியே எங்கள் வாழ்க்கை நடந்து வந்தது. அவளே எனக்குப் பாடங் கற்றுக் கொடுத்தவள். நான் அன்று முதற் கொண்டு பாடிவருகிறேன். சிறிது ஆடக்கூட அவளே என்னைப் பழக்கினாள். அவள் அந்த கத்தா-மெலாத் என்ற சிலையின் கீழ் நின்றுகொண்டு பாடுவது: வழக்கம். காக கிடைக்கும், ஒருநாள் அவள்பாடுகின்றபாட்டில் என்ன பாடு கிறோம் என்று அவளுக்கே புரியாத அந்தப் பாட்டில்