பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 13 அதைப்பற்றியே அந்தத் துப்பறிவோனிடம் பேசிக் கொண்டிருந்தேன். போதுமா விளக்கம்? ஆன்ழெல் : பத்தாயிரம் பவுன்கள்! ...ஊம் ... அந்தப் பெண் கிடைத்தால் அவளுக்கு என்ன கொடுப்பாய்? திஸ்ப் : அவள் விரும்பினால் என் உயிரையே கொடுப்பேன்? ஆன்ழெல் : அது சரி-நீ-அவளை எப்படி எதைக் கொண்டு தெரிந்துகொள்வாய்? * திஸ்ப் : என் தாய் அவளுக்குக் கொடுத்த சிலுவையைக் கொண்டு. ஆன்ழெல் : அவள் அதை இழந்திருந்தால். திஸ்ப் : இருக்காது. அதை அவள் ஒருபோதும் இழக்க (էԲւգ Այո Յ:l . - ஆன்ழெல் : (ஒமோதேயைப் பார்த்துக் கொண்டேர் அங்கு யாரோ ஆள்தெரிகிறது. ஆள் இருக்கிறா னென்று உனக்குத் தெரியுமா? அது யார் அது? திஸ்ப் : (சிரித்துக்கொண்டே) ஆம். யாரோ இருக்கிறான் என்று மட்டும் தெரியும். அவன் இன்னும் தூங்கிக் கொண்டே இருக்கிறான். நல்ல தூக்கம். அவனிடத் தில் சென்று உங்கள் பொறாமையையும் ஆத்திரத்தை யும் காட்டவேண்டாம். அவன் என் ஆள் ஒமோதேய் ஒமோதேய் என்ன அது? யாரது? ஓமோதேய். கோமானே! திஸ்ப்-ஒருபெண்- அதைப்போல் அவன் ஒரு ஆண். ஒமோதேய் நன்றாக இசைக்கருவி மீட்டக்கூடியவன். என் நண்பர்களிலே ஒருவர் சிபாரிசுக் கடிதம் கொடுத்தனுப்பியிருக்கிறார். சந்தேகக்கோமானே-நான் வேண்டுமானால் அந்தக் கடிதத்தை உங்களுக்குக் காட்டுகிறேன் . அவன் சோம்பேறி. வேலை கிடைக்கவில்லை என்று