பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் - 1 5. இதைப்பற்றி கேள்விகேட்டுக் கொண்டே இருக்கிறீர் களே இது என்ன பொறாமையா? அல்லது பயமா? ஆன்ழெல் : இரண்டுந்தான். தீஸ்ப் : பொறாமை! அது சரி. நீங்கள் இரண்டு பெண் களைக் கவனிக்கவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் பயம்? உங்களை ப் பார்த்தால்தான் மக்களுக்குப் பயமாக இருக்கிறது. பயமாம்! இதென்ன முரணாக இருக்கிறதே உங்கள் பதில்! . ஆன்ழெல் : பயப்படுவதற்கு முதல் காரணம் சொல்லு கிறேன் கேள். (அவள் அருகில் நெருங்கித் தாழ்ந்த குரலில்) அவனமாகக்கேள்-தீஸ்ப்-நீ சொல்வது என்னமோ உண்மைதான். நான், சர்வாதிகாரி, மன்னன்-கோமான் - என்னால் எதையும் செய்ய முடியும். யாவும் உண்மைதான். வேனிஸ் என்னை இந்தப் பது நகரத்திற்குச் சர்வாதிகாரியாக நியமித் திருக்கிறது . புவி நகத்தில் அகப்பட்ட செம்மறி ஆடுபோல, பது என்னிடம் இருக்கிறதென்பது: என்னவோ உண்மைதான். ஆனால் நான் எவ்வளவுக் கெவ்வளவு சர்வாதிகாரியோ அவ்வளவுக்கவ்வளவு ஒன்றுமில்லாதவன். எனக்கு மேல் பயங்கரமானகொடுரமான வேனிஸ் இருக்கிறது. தீஸ்ப் வேனிஸ் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? நான் சொல்கிறேன் கேள்! வேனிஸில் உள்ள பதின்மர் குழு நாட்டின் உயிர்நாடி. வேனில் அரசு-அதுவே அதன் கண்ணிலிருந்து நான் நான் என்பதென்ன இந்தப் பது முதலிய கீழ் அடங்கிய நாடுகள் தப்பமுடியாது. மெதுவாகப் பேசு. இங்குக் கூடப் பதின்மர்குழுவின் காதுகள் கேட்டுக்கொண்டும், கண்கள் பார்த்துக்கொண்டும் இருக்கும். நமக்கு அவர்களில் ஒருவரைகூடத் தெரியாது. ஆனால் அவர்களுக்கு நம்மை நன்றாய்த் தெரியும். அவர்கள்