பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

立6 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ எங்கும் காற்றைப்போல நிறைந்திருப்பார்கள். அவர்கள் உடை நகத்திரக்குறி இவை நமக்கு வெளிப் படையாகத் தெரியாது. துரக்குமேடைக்கு நாம் போகும்போதுதான் அவர்களைப் பார்க்க முடியும். அவர்கள் கையில் என் தலை, உன் தலை கிளர்ச்சிக் காரர்களின் தலை யாவும் அடங்கி இருக்கின்றன. வேனிஸில் இருப்பவர்கள்கூட அவர்கள் முகத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள். ஒன்றும் தெரியாத ஊமைகள் போல அவர்கள் இருப்பார்கள். அவர் களிடம் அகப்பட்டால் உண்மையைக் கக்க வைத்து விடுவார்கள். உண்மை தெரிந்த பிறகு சாவுதான். அதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது மறைவாகக் கொல்லப்படும். ஒரு வார்த்தை பேசவோ மறுப்புக் கூறவோ-கெஞ்சவோ கூத்தாடவோ முடியாது. கொலையாளி யார்-குற்றவாளி யார் என்பது கொலையாளிக்கும், குற்றவாளிக்கும் கூடத்தெரியாது. முகமூடி இட்டே யாவும் நடைபெறும். ஒரு குடும்பத்தில் ஒருவன் குறைகிறான் என்றால் குளம், குட்டை, ஆறு, கிணறு இவைகளுக்குத்தான் தெரியுமே ஒழிய குடும்பத்திற்குத் தெரியாது. அவ்வளவு மறை வாக- வஞ்சகமாக உயிர் 'வாங்கப்படும். வேனிஸ் கலை விருந்து, இசை விருந்து, விழாக்கள் மலிவென்று பேசப்படுகிறதே ஒழிய, என்ன நடக்கிற தென்பது உனக்குத் தெரியாது. கலையில் கலந் திருக்கும் வாழ்க்கை உனக்கு இருப்பதால் வேனிஸ் கலைக்கு இருப்பிடம், இன்பமாகப் பொழுதுபோக்க ஏற்றச் சிறந்த நகரம் என்று நீ நினைக்கலாம். மற்ற வர்களும் கூறலாம். ஆனால் அரசியலில் கலந்த எனக்கல்லவா அங்கு நாடோறும் என்ன நடக்கிற தென்பது தெரியும். அங்கு என்பதென்ன இங்குக் கடத்தான். ஒவ்வொரு வீட்டிலும் கோட்டையிலும் ஒற்றர்கள் பாம்பைப்போல நுழைந்து யாவையும் தெரிந்து கொள்வார்கள். உன்னைச் சுற்றி யாரோ