பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 19 திஸ்ப் : இன்னும் எப்படித்தான் உங்களுக்குச் சொல் வதோ தெரியவில்லையே! ஆன்ழெல் : சரி. நீ என்னைக் காதலிக்காவிட்டால் போகிறது. நான் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால் நீ வேறு யாரையும் காதலிக்கக்கூடாது. காதலிப்பதாகத் தெரிந்ததோ... திஸ்ப் : உங்களுக்கு இதேதான் வேலை... ஆன்ழெல் : தீஸ்ப். எப்பொழுதுதான் நீ என்னைக் காதலிப்பாய் சொல்லேன்? திஸ்ப் : இங்குள்ள மக்கள் உங்கள் மீது அன்பு காட்டும் போது . ஆன்ழெல் : ஊம். சரி இங்கேயே இரு, பதுவை விட்டு நீ போக நான் விரும்பவில்லை . தெரிகிறதா. நீ சென் றால் என் உயிரும் உன்னைத் தொடர்ந்து வந்துவிடும். அதோடார் நம்மை நோக்கி யாரோ வருகிறார்கள். நீண்ட நேரமாக நாம் பேசிக்கொண்டிருப்பதுவேனிசில் நம்மீது ஐயத்தை உண்டாக்கும். நான் வரட்டுமா. (சற்று நின்று ஒமோதேயைக் காட்டி) இவனைப் பற்றி நீதான் பதில் சொல்லியாக வேண்டும். நினைவிருக் கட்டும். தீஸ்ப் : யார். இந்தத் தூங்குமூஞ்சியைப் பற்றிதானே ஆகட்டும். ஆன்ழெல் : அதோ உன் அண்ணன் வருகிறான். அவ னோடு பேசிக்கொண்டிரு (போகிறான்)