பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 28 அனாபெஸ் : (சிரித்துக்கொண்டே) *உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். நான் கவனித்துக்கொள்கிறேன் (திஸ்ப் போகிறாள்) 口 காட்சி-3 ரொதோல்யோ-அனாபெஸ்தோட ஒமோதேய் (துரங்கிக் கொண்டிருக்கிறான்) அனாபெஸ்தோ- - (தீஸ்ப் போவதைப்பார்த்துக் கொண்டே.) அடடா! என்ன அழகு! என்ன அழகு! நீதானப்பாகொடுத்து வைத்தவன். அவள் உன்னைத் தன் உயிராகவல்லவா காதலிக்கிறாள். ரொதோல் :அனாபெஸ்தோ உனக்கு உண்மைதெரியாது ஏதோ கொடுத்துவைத்தவன் என்றெல்லாம் என்னைப் புகழுகிறாய். என்னைவிட பாவி வேறுயாரும் இருக்க முடியாது. நான் அவளைக் காதலிக்கவில்லை. அனாபெஸ் : என்ன என்ன சொல்லுகிறாய்? ரொதோல் (ஒமோதேய் தாங்குவதைப் பார்த்துக் கொண்டே) இது யார் இந்த மனிதன் அனாபெஸ் : அட அவனா... அந்த இசைமீட்டுவோன் - ஒமோதேய்-அவனைத்தான் உனக்குத் தெரியுமே. ரொதோல் : அந்த முண்டமா? - அனாபெஸ் , அப்படியானால் நீ தீஸ்பைக் காதவிக்க வில்லை! விளையாடுகிறாயா? உண்மைத்ானா? - -