பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் . 多岳 பார்க்கிறான். Quతుఖ எழுந்து ரொதோல்போவின் பின்சென்று நிற்கிறான்) - . D காட்சி-4 ரொதோல் போ-ஓமோதேய் (ஒமோதேய் ரொதோல்போவின் தோளில் கையை வைக்கிறான். ரொதோல்போ திடுக்கிட்டுத் திருப்பிப் பார்க்கிறான்) . . ஒமோதேய் : ரொதோல்போவா! உன்பெயர் ரொதோல் போவல்ல அண்ணே உன்பெயர் ரொமோனா பதுவை பல நூற்றாண்டுகளுக்குமுன் ஆண்ட பழைய குடும்பத் தைச் சேர்ந்தவன் நீ. ரொதோல்போ என்ற பொய்ப் பெயரோடு ஒவ்வொரு நகரமாகச் சுற்றித் திரிகிறாய் நீ; வேனிசில் சில சமயங்கள் வந்து தங்கினாய். ஏழாண்டுகளுக்குமுன் வேனிசில் ஒர் அழகிய கன்னிப் பெண்ணைச் சந்தித்தாய். நீ அவளைத் தொடர்ந்து போகவில்லை. வேனிசில் ஒரு கன்னிப்பெண்ணைத் தொடர்ந்து செல்வது என்பது கத்திக் குத்தைத் தேடிச்செல்வதாகும். ஆனால், மாதாக் கோவிலுக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தாய். அந்தக் கன்னிப் பெண்ணும் கோவிலுக்கு வரத் தவறியது. கிடையாது. உங்கள் உள்ளம் அங்கே கலத்தது. அவள் யார்? பெயர் என்ன? என்று தெரிந்து கொள்ளாமலே நீ அவ்ளை காதலித்தாய். இன்று வரையில் அவள் யார் என்பதே உனக்குத் தெரியாது. அவள் பெயர் கத்தேரினா என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு மட்டும் அவள் கத்தேரினா. இயற்பெயர் அவளுக்கு அதுவல்ல. கடிதம் எழுத வழிகிடைத்தது. எழுதினாய் அவளும் உனக்கு எழுதினாள். செசேலியா என்ற