பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விக்டர் விபுகோவின் ஆன்மெல்லோ பெயருடைய ஒரு கிழவியின் வீட்டில் நீங்கள் சந்தித் தீர்கள். நீ அவளை உயிராகக் காதலித்தாய். அவள் தன் வாழ்வுக்கு நீதான் உயிர் என்று எண்ணினாள். உண்மைக் காதல் உங்களிடையே உருப்பெற்றது, நீங்கள் ஒழுங்கு தவறி நடந்துகொள்ளவில்லை. பெருந்தன்மையோட காதலித்தீர்கள். மாசுமரு. வற்றே அவள் இருந்து வந்தாள். சந்திப்பால் எந்தக் களங்கமும் ஏற்படவில்லை. அவள் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். என்பது மட்டும் உனக்குத் தெரியும். வேனிவில் உள்ளூர்ப் பணக்காரனே ஒரு பணக்காரப் பெண்ணை மணந்து கொள்ள முடியும். அல்லது அவன் அரசனாக வேண்டும். நீ வேனிஸ் நாட்டானுமல்ல-அரசனு: மல்ல. மணவாழ்க்கை உங்கள் இருவருக்கும் எட்டாக் கணியாக இருந்தது. அவள் வருவதை நிறுத்தி விட்டாள். அவளுக்குத் திருமணம் நடந்துவிட்டது என்று கிழவி கூறினாள். மணந்தவன் யார்-அவள் பெற்றோர் யார்- என்பதை நீ அறிந்து கொள்ள முடியவில்லை. அவளை மறந்துவிட எங்கெங்கோ தேடிப்பார்த்தாய். வேனிசைவிட்டு நீ வெளியேறி. னாய். இத்தாலி முழுதும் ஒடிப்பார்த்தாய் அவள் நினைவு உன்னைத் தொடர்ந்துகொண்டே இருந்தது. உன் வாழ்க்கையை விளையாட்டில், கேளிக்கையில், களியாட்டத்தில் எப்படி எப்படியோ திருப்பிப் பார்த்தாய் பயனற்றது உன்எண்ணம். வேறு பெண்களின் மீது உன் பார்வையைத் திருப்பினாய். பெண்க ளி டத் தி லே உறவாடிப் பார்த்தாய். நீட்டுவானேன் இந்த நடிகை தீஸ்பைக்கூடக் காதலித்தாய். அதுவும் பயனற்றதாகவே தோன்றி யது. புதுக்காதல் ஏற்பட ஏற்பட பழைய காதல் நினைவே மேலோங்கி மேலோங்கி உன்னைத் துன்புறுத்தியது. நீ இங்குப் பதுவுக்கு அந்த நடிகை தீஸ்போடு வந்து மூன்றுமாதமாகிறது. அவள்