பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 27 உன்னைத் தன் அண்ணன் என்று சொல்லிக்கொண் டிருக்கிறாள்- சர்வாதிகாரி ஆன்ழெல்லோ திஸ்பைக் கண்டதிலிருந்து மனதைப் பறிகொடுத்து அவள்மீதே நாட்டமாக இருக்கிறான். அதுமட்டுமா இன்னும் சொல்கிறேன் கேள் பிப்ரவரித் திங்கள் பதினாறாம். நாள் மாலை முகத்தை மறைத்துக்கொண்டு ஒருபெண் மொலினோ பாலத்தின் அருகில் உன்னைச் சந்தித்தாள். உன் முன்னோர்களால் இடித்துப் பாழாக்கப்பட்ட கோட்டையின் அருகில் உன்னை அழைத்துக்கொண்டு போன்ாள். அது மக்கள் நடமாட்டமில்லாத இடம். அங்கு ஒரு குடிசை இருந்தது. அந்தக் குடிசையில் வேனிஸ் காதலியை நீ. சந்தித்தாய். அன்று முதல் வாரத்திற்கு மூன்று தடவை அந்தக் குடிசையிலேயே உன் காதலை-உன் உயிரை-வேனிஸ் அழகுத் தேவதையைச் சந்தித்து வந்தாய். அவள் தன் குடும்பத்திற்கும் ஒழுக்கத்திற்கும். கணவனுக்கும் தன் காதலுக்கும் இழுக்குத் தேடாத வகையில் நாணயமாக-து.ாய உள்ளத்தோடு சந்தித்து வந்தாள். இதுவரையில் அவள் யார் என்பதை உனக்குக் கூறியது கிடையாது. அந்தப் பழைய கத்தேரினாவாகவே அவள் இருந்தாள். கடந்த திங்கள் உங்கள் இன்பவாழ்வு குலைந்தது. குடிசைக்கு வருவதை நிறுத்திக்கொண்டாள் அவள் ஐந்து வார மாக நீ அவளைப் பார்க்கவேயில்லை. நீ அவளைத் தேடிக்கொண்டே இருக்கிறாய். ஆனால் அவளை இனிச் சந்திக்கப் பார்க்க முடியாது, எப்பொழுதும், நீ அவளைப் பார்க்க முடியாது. ரொதோல்: (அவனை ஊடுருவிப் பார்த்து) யாரப்பா 虚” ஒமோதேய்: விணானக் கேள்வி. நானும் அதற் கெல்லாம் விடை கூறமாட்டேன். நீ இன்று அவளைப் பார்க்க விரும்புகிறாயா? . . . -- - - - - -