பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விக்டர் வி. யுகோவின் ஆன்ழெல்லோ ரொதோல்: ஆம் ஆம்! அவளை நான் பார்க்க விரும்பு கிறேன். கடவுள்மேல் ஆணையாகச் சொல்லுகிறேன் நான் அவளை ஒரு வினாடி பார்த்தால் போதும். இறப்பதைப் பற்றிக் கவலை இல்லை எனக்கு. ஓமோதேய் சரி ஆகட்டும். நான் உன்னை அழைத்துப் போகிறேன். - ரொதோல்: எங்கே? ஒமோதேய்: அவள் வீட்டிற்கு, உன் காதலி வீட்டிற்கு. ரொதோல்: அவள் யார்? பெயர் என்ன? சொல் சொல்லப்பா. . . . ஒமோதே ய்: அவள் விட்டிற்குப் போனபிறகு சொல் கிறேன். - . ரொதோல்: நீ கடவுள் மாதிரி வந்தாய். ஒமோதேய்: அது கிடக்கட்டும். இன்று மாலை நிலவு எழுந்தவுடன் பனிரெண்டு மணிக்கு சாந்தோ உயிர்பானோ தெருவிவிருக்கிற கோட்டையருகில் இரு. நான் அங்கு இருப்பேன். உன்னை அழைத்துப் போகிறேன். சரியாகப் பனிரெண்டு மணிக்குத் தெரிகிறதா? . * : ரொதோல்: நன்றி- நீ யாரென்றுகூடச் சொல்ல மாட்டாயா? - ஒமோதேய்: நானா, நான் ஒரு முண்டம். (போகிறான்) ரொதோல்: (தனியாக நின்றுகொண்டே) யார் இந்த மனிதன்- யாராக இருக்கக் கூடும்'. நமக்கென்ன அதைப்பற்றி- பனிரெண்டு மணி-இரவு பனிரெண்டு மணி. இன்னும் எவ்வளவோ நேரம் இருக்கிறதே. கத்தேரினா! அவன் குறிப்பிட்ட அந்தப் பனிரெண்டு மணிக்காக என் உயிரைக்கூடத் தருவேனே! . - (தீஸ்ப் வருகிறாள்)