பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ மனதில் இருக்கிறதோ தெரியவில்லையே (நீள் இருக்கைப் பக்கம் பார்த்துக்கொண்டே) ஒமோதேய் விழித்துக் கொண்டாயா? (ஒமோதேய் அரங்கிற்கு எழுந்து வருகிறான்.) Ll காட்சி-6 தீ ஸ்ப்-ஒமோதேய் ஒமோதேய்: ரொதோல்போவின் பெயர் ரமோனா முண்டம் ஒரு அறிவாளி துரங்குகிற மனிதன்கண்ணை மூடிக் காதைத் திறந்து காத்திருக்கும் பூனை. திஸ்ப். என்ன சொல்லுகிறான்? ஒமோதேய்: (தன் இசைக்கருவியைக் காட்டி) இந்த இசைக்கருவியின் நரம்புகள் விரும்புகின்ற ஒலியைக் கொடுக்கும். ஆணின் இதயம், பெண்ணின் இதயத் திலும் நரம்புகள் இருக்கின்றன. இசை மீட்டலாம். திஸ்ப். என்ன சொல்லுகிறாய்? புரியவில்லையே. ஓமோதேய் : அதுவா. இப்பொழுது உன்னைவிட்டுச் செல்கிறானே இளைஞன் அவன் இன்றைய இரவு எங்குச் செல்கிறான் என்பதை நீ தெரிந்து கொள்ளலாம் என்பதுதான். திஸ்ப். ஒரு பெண் விட்டிற்கா? ஒமோதேய்: அழகிலே சிறந்த அணங்கு வீட்டிற்கு. திஸ்ப் : என்ன? என்ன சொல்கிறாய்? நீ யார்? ஒமோதேய் : எனக்கொன்றும் தெரியாது.