பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 3 * தீஸ்ப் ! நீ யார்-யாரப்பா நீ. நான் இதுவரையில் நினைத்துக்கொண்டிருந்த இசைமீட்டுவோனல்லவா நீ. சர்வாதிகாரி அப்பொழுதே சந்தேகப்பட்டார். சரியாகத்தானிருக்கிறது. -ரொதோல்போ ஒரு பெண்ணிடத்திலா. அதுவும் இன்றைய இரவு அதுதானே நீ சொன்னாய். நீசொன்னது அதுதானே. ஒமோதேய் : எனக்கொன்றும் தெரியாது. திஸ்ப்.: பார்த்தாயா பொய்சொல்லுகிறாய். இருக்காது. ஒருபோதும் இருக்காது. ரொபோல்தோ என்னைக் காதலிக்கிறான். வேறு பெண் என்பது பொய்... ஒமோதேய் : எனக்கொன்றும் தெரியாது. திஸ்ப் : கொடியவன். பொய்சொல்கிறவன். நீ பொய் சொல்கிறாய். என்னிடம் இப்படிக் கோள்மூட்டச் சொல்லி யாரோ பணம் கொடுத்திருக்கிறார்கள் உனக்கு. ரொதோல்டோ என்னைக் காதலிக்கிறான். என் பகைவர்கள்- ஆம், பகைவர்கள் செய்த சூழ்ச்சி. இப்படிப் பொய்சொல்லி என்னைத் துன்பப்படுத்த முடியாது. போ போ. உன் பேச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை. போ உன் வேலையைப்பார்த்துக்கொண்டு போ. ஒமோதேய் : சர்வாதிகாரி ஆன்ழெல்லா கழுத்தில் தங்கச் சங்கிலி போட்டுக் கொண்டிருக்கிறாரே அதில் அழகிய வேலைப்பாடமைந்து பொருள் ஒன்று தொங்குகிறதே அது என்ன என்று உனக்குத் தெரியுமா? அது ஒரு சாவி. அந்தப் பொருள்மேல் உனக்கு ஆசை இருப்பதாக நடித்து-அதைக்கேள்அதைக்கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம். என்பதை வெளிக்குக் காட்டிவிடாதே நினைவிருக் கட்டும்.