பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் з5 திஸ்ப் : வேனிஸிலிருந்து வந்த துரதுவரைச் சற்றுமுன் தேடினீர்களல்லவா. மறந்தேபோனேன். அதோ விர்ழிலியோதொஸ்கோ, வேனிஸ் குடியரசுத் தூதுவன். உங்களுக்காகத்தான் அங்கே காத்துக் கொண்டிருக்கிறார். நல்ல மனிதர் - போங்கள்நேரமாகிறது போங்கள் பிறகு பேசுவோம். ஆன்ழெல் : உண்மையாகவா? திஸ்ப் : நீங்கள் அவரிடம் ஏதோ செய்தி பேசவேண்டு மென்று சற்றுமுன்பு தேடவில்லையா-போங்கள். ஆன்ழெல் : என்னைவிட்டுப் போவதற்காகவா இந்தப் பொய். - . திஸ்ப் : அதோ-அதோ அங்கே இருக்கிறார். ஆன்ழெல் : (ஆன்ழெல்லோ அவள் கையைப்பிடித்து முத்தமிட்டு) தீஸ்ப் நீ என்னைக் காதலிக்கிறா யல்லவா! - . திஸ்ப் : அதோ-அதோ தொஸ்கோ. உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். (ஆ ன் .ெ ழ ல் லே போகிறார்ட ஒமோதேய் அரங்கிற்குவருகிறான்ட தீஸ்ப் அவனிடத்திற்கு ஓடுகிறாள்) காட்சி-8 திஸ்ப்-ஓமோதேய் திஸ்ப் : இதோ நீ சொன்ன சாவிவாங்கி வந்துவிட்டேன். ஒமோதேய் : காட்டு-(வாங்கித் திருப்பித்திருப்பார்த்து) ஆம்- இதுவேதான் சர்வாதிகாரியின் அரண்மனையின் கீழ்ப்பாகத்தில் ஒரு பகுதி மொலினா பாலத்தைப் பார்த்தாற்போல் இருக்கிறது. இன்று மாலை. அங்கே