பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ வேனிஸிக்குக் போய்வந்தார்களே அப்பொழுது தானாம். ஒரு துப்பறிபவன். நன்றி கெட்ட துப்பறிபவன். ராணி அம்மாமீது காதல்கொண்டா னாம். துணிந்து கடிதங்கூட எழுதினானாம். அவர் களைப் பார்க்கவேண்டுமென்று. அது நடக்கக் கூடியதா? ராணி அவனை. அடித்துத் துரத்தச் சொன்னார்களாம். நல்லவேலை செய்தார்கள். தப்ன்.: (8-ഖബ வணங்குகின்ற இருக்கையில் (நாற்காலி) அருகில் இருந்த கதவைத் திறந்து கொண்டே) சரி ரெழினெல்லா ராணி அம்மாள் படிக்கிற நேரம் இது. சீக்கிரம் வேலையை முடி. ரெழினெல் : (மேஜைமீது புத்தகங்களை அடுக்கிக் கொண்டே) மற்றொரு செய்தி-அடேயப்பா-அது மிகக் கொடுமையானது. அது எனக்கு நன்றாகத் தெரியும். நம் தலைவன் இடத்தில் சொல்வதற்காகப் போனான் அந்த அரண்மனை வேலைக்காரன். அவ்வளவுதான். அன்று மாலையே திடீரென்று அவன் இறந்து விட்டான். ஏன் தெரியுமா அது. நஞ்சு-நான் உனக்கு முன்கூட்டியே சொல்லுகிறேன். விழிப்பாக வாயை மூடிக்கொண்டு இரு. இந்தக் கோட்டைச்சுவர் கள் ஒவ்வொன்றிலும் சி. டி. எக்ஸ் (C. D. X.) ஒவ்வொன்று கேட்டுக் கொண்டே இருக்கிறது தெரிகிறதா- - - தப்ன் ஊம் விரைவாக வேலையை முடி. இன்னொரு முறை பேசுவோம். அம்மா காத்துக்கொண்டிருக் கிறார்கள். ரெழினெல் : நூல்களை அடுக்கிக்கொண்டே மேஜையின் மேல் எதையோ பார்த்துக்கொண்டே உனக்கு அவசரமாக இருந்தால் நீ போ இதோ உன்பின்னே வந்துகொண்டே இருக்கிறேன்.