கவிஞர் வாணிதாசன் 4 I ரெழினெல் : அப்படியே நடக்கிறேன். ஓமோதேய் : உன் ராணி எங்கே. ரெழினெல் : பூஜை அறையில் கடவுளைத் தொழு கிறார்கள். . ஒமோதேய் : பிறகு இங்கு வருவார்களா? ரெழினெல் : ஆம் - வருவார்கள். ஒமோதேய் : அரைமணி நேரத்திற்கு முன் வர மாட்டார்களே. ரெழினெல் : இல்லை - வரமாட்டார்கள். ஒமோதேய் : சரி - போ-வாயைத் திறக்கப்போகிறாய். இங்கு என்ன நடந்தாலும் அதைப்பற்றி நீ கவனிக்கக் கூடாது. வாயைத் திறக்கக்கூடாது. நடக்கிறபடி விட வேண்டும். பூனைஎலியோடுவிளையாடுகிறது. அதைப் பற்றி உனக்கென்ன?என்னைப் பார்த்தாய் அல்லவாஒரு கண் அசைவு சாடை, சீண்டுதல் எது செய்தாலும் எனக்குத் தெரியும்டபோ- . ரெழினெல் : கடவுளே! இங்கு யார் - சாவப்போகிறார் களோ? . * . ஓமோதேய் : வாயைத் திறந்தாயோ-தோன் சாவாய். (ஒமோதேய் அவளுக்குச் சைகைகாட்டுகிறான். அவள் தன் அறைக்குப் போய்விடுகிறாள். ஒமோதேய் அந்தப் பாத்திரங்கள் வைக்கும் சிறிய அலமாரியின் அருகில் போகிறான். அது சுழன்று வழி விடுகிறது.) - ரொதோல்போ இப்பொழுது நீங்கள் வரலாம் ஒன்பது. படிகளே இருக்கினறன-ஏறுங்கள் மேலே. - - {படியில் ஏறும் சத்தம் கேட்கிறது-ரொதோல்போ வருகிறான்)
பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/43
Appearance