பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4垒 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ ஒமோதேய் : நீங்கள் இங்கே இருங்கள். ரொதோல் : இங்கேயே இருந்தால்! இங்கேயே இருந்தால் உன்னிடத்தில் உண்மையைச் சொல்கிறேன். அவளைப் பார்ப்பதற்கு-அவள் ஒரு மணி ஒரு நிமிடம் எப்பேர்ப் பட்ட நிலைமை என்பது உனக்குத் தெரியாதா. பார்க்கவேண்டும் அவள் எங்கே இருக்கிறாள்: ஒமோதேய் : அங்கே-அவள் பூஜைஅறையில் ரொதோல் : எங்கே-அவளை நான் பார்ப்பது? ஓமோதேய் இங்கேதான் ரொதோல் : எப்பொழுது ஓமோதேய் : இன்னும் கால்மணிநேரத்தில். ரொதோல் : ஆ~கடவுளே! ஒமோதேய் : (அவனுக்கு ஒவ்வொரு கதவாகக் காட்டி) விழிப்பாய் இரு. அதோ அதுதான் சர்வாதிகாரியின் அறை-இப்பொழுது அவர் உறங்கிக் கொண்டு இருப்பார். எந்தச் சத்தமும் அவர் தூக்கத்தைக் கலைக்காது-நம்மையும் கத்தேரினாவையும் தவிர - நீங்கள் கவலையற்று இருக்கலாம். நாம் வந்த வழிஎன்னைத்தவிர யாருக்கும் தெரியாது. நான் அதை யாருக்கும் சொல்லமாட்டேன். காலையில் நீங்கள் தப்பித்துப்போய்விடலாம். (சற்று உள்ளே சென்று) இதுதான் கணவன் வருகின்ற வழி. கணவனும் காதலனும் ஒன்றுதானே. (சன்னலைக்காட்டி) எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த வழியைப் பயன் படுத்தாதீர்கள். எண்பது அடிஉயரம் அது மட்டுமல்லகீழே ஆறு-வரட்டுமா? - - ரொதோல் : இன்னும் கால்மணி நேரமா? ஒமோதேய் ஆம். “. . . . . . . . . . . . ரொதோல் : தனியாக வருவாளா?