பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் - 45 ஒமோதேய் ! நிச்சயமாகக் கூறமுடியாது. எதற்கும் சற்று ஒதுங்கி மறைந்து இருங்கள். ரொதோல் : எங்கே? ஒமோதேய் : கட்டிலுக்குப் பின் புற ம் அல்லது நிலாமுற்றத்தில்-அவசியம் என்று தோன்றினால் இந்தப் படியால் மேலே ஏறிவிடுங்கள். பூஜை அறை யில் நாற்காலி ஓசை கேட்கிறது. ராணி கத்தேரினா வரப்போகிறார். நாம் பிரியவேண்டிய நேரம் வந்து விட்டது. வரட்டுமா? ரொதோல் : நீ யாராக இருந்தாலும்-இவ்வளவு உதவி எனக்குச் செய்தபிறகு என் உடல்பொருள் ஆவி - யாவும் உன்னுடையதே! - - - (முற்றத்தில் மறைந்துகொள்கிறான் ஒமோதேய். அரங்கில் முன்வந்து தனக்குள்ளே) அவள் உங்களுக் கல்ல கோமானே ரொதோல்போ தன்னைப் பார்க் கிறானா என்று பார்க்கிறான். மார்பில் இருந்த ஒரு கடிதத்தை எடுத்து மேஜைமீது வைத்துவிட்டு இரகசிய வழியே மறைந்து விடுகிறான் ஒமோதேய்பூஜை அறையிலிருந்து கத்தேரினாவும்-தப்னும் வருகின்றனர். கத்தேரினா வேனிஸ் கோமகள் போல உட்ை உடுத்தியிருக்கிறாள்) காட்சி-3 கத்தேரினாடதப்ன் ரொதோல்போ : (முற்றத்தில் மறைந்து கொண்டிருக் கிறான்.) - - கத்தேரினா : ஒரு திங்களுக்கு மேலாகிறது! தப்ன் உனக்குத் தெரியுமாடி. ஆம் ஒரு திங்களுக்கு மேலா கிறது! உவம்: தீர்ந்தது: துரங்கமுடிந்தாலாகிலும் கனவிலாவது காணலாம்! துரக்கம்கூட வரமாட்டேன் என்கிறதே! ரெழினெல்லா எங்கே?