பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ தப்ன் அவள் அறைக்குச் சென்று கடவுளை வணங்கு கிறாள்-உங்களை மகிழ்விக்க நான் சென்று அவளை அழைத்து வரட்டுமா? கத்தேரினா : வேண்டாம்-கடவுளை மகிழ்விக்க சற்று நேரம் அவள் வணங்கட்டும்! தப்ன் : இந்தச் சன்னலை மூடட்டுமா அம்மா? கத்தேரினா : தப்ன்! கேட்டாயா! ஐந்து வாரங்கள் ஆகின் றன. அவரைப் பார்க்காத ஐந்து வாரங்களும் ஐந்து யுகங்களாகவல்லவா தோன்றுகிறது. வேண்டாம் சன்னவை மூடாதே - தொட்டுப்பார் என் தலையை கொதிப்பேறிய என் தலைக்குச் சிறிது குளிர்காற்றை அதுதான் தருகிறது. இனி அவரைப் பார்க்க முடியாது! சிறையில் அடைக்கப்பட்டேன்! இந்த அறையில் யார் நுழைந்தாலும் சாவைத் தழுவ வேண்டும். சர்வாதிகாரியின் கட்டளை இது 1 ஆம். அவரைப் பார்க்கக்கூடாது. இந்த அறையில் அவரைப்பார்க்க நினைப்பது சாவுக்கவரை அழைப்பதைப் போலல்லவா. வேண்டாம். அவரைப் பார்க்க நினைக்கவேண்டாம்! என் காதல்! ஆம்! கொடுத்து வைக்காதவள் நான்! கடவுளே எதற்காக அவர் பதுவிற்கு வந்தார்? எதற்காக மீண்டும் அவரை இங்குச் சந்தித்தேன்? இப்படி விரைவில் என் இன்பக்கோட்டை தரைமட்டமாகுமென்றறிந்திருந் தால் அந்தக் குடிசையில் அவரை வரவேற்றிருக்க மாட்டேனே. மறந்திருந்த அவர் மனதிற்குத் தொல்லைகளையல்லவா உண்டாக்கிவிட்டேன். இனி நான் வெளியே போக முடியாது. இந்த ஒரே ஒரு சன்னல் தான் சிறு காற்றையும் சூரிய ஒளியையும் எனக்களிக்கிறது. அந்த ஒளியிலே அவர் முகத்தை அந்த இன்பமுகத்தைப் பார்க்கிறேன். ரொ தோல்போ! அதையும் மூடுகிறேன் என்கிறாயே தப்ன்- சொல்லடி சொல்-நான் இனி அவரைப் பார்க்க முடியாதென்று நம்புகிறாயா?