பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 47 தப்ன் : ராணி அம்மா...... கத்தேரினா : நான் மற்ற பெண்களைப் போலல்ல. விழா - விளையாட்டு இன்பப் பொழுது போக்கு இவை எதுவும் என்னை மகிழ்விக்க மறுக்கின்றன. ஏழு ஆண்டுகளாக எனக்கு ஒரே ஒரு எண்ணந்தான் ரொதோல்போ' நான் எதைப் பார்த்தாலும் எங்குப் பார்த்தாலும் ரொதோல்போவே தோன்று. கிறார். என் கண்கள் அவர் உருவிற்கென்றே படைக் கப்பட்டன போலும். வேறு எதுவும் கண்களுக்குத் தோன்றமாட்டேன் என்கிறதே. ஏழு ஆண்டு களாக அவரைக் கண்டது முதல் இன்று வரையில் என் எண்ணமெல்லாம் நான் எங்கு இருந்தாலும் எது செய்தாலும் அவரையே வட்ட மிடுகிறதடி, நான் கன்னியாக இருந்தேன். சிறிதுகூட ஈவு இரக்கமின்றி எனக்குத் திருமணம் செய்து விட்டார்கள். என் வாழ்க்கையைப் பார்த்தாயா? எல்லா வசதி இருந்தும் என் வாழ்க்கை வறண்ட, பாலையாகவல்லவா இருக்கிறது. தப்ன் : துன்பம் தருகின்ற இந்த நினைவுகளையெல்லாம் உங்கள் மனதிலிருந்து ஒட்டிவிடுங்கள் அம்மா. கத்தேரினா : எப்படியடி மறப்பது. அவரும் நானும் போக்கிய அந்த இன்பமான மாலை நேரங்களை மறக்க முடியுமா? என்ன இனிய பேச்சு-அடக்கமான ஒழுங்கைமீறாத அவர் செயல்-குணம்-போடி மறக்க முனைய முனைய வளர்ந்து தழைக்கின்றன. அந்த நினைவுகள்-நீ போய் உறங்கு பாவம்! நீயும் ஏன் என்னுடன் கவலைப்படவேண்டும்-நான் தான் அதற்காகவே பிறந்துவிட்டேன். நீயுமா? அதில் பங்கு கொள்ளவேண்டும் போய் ரெழினெலாவோடு: உறங்கு. - - தப்ன் : ராணி அம்மாவுக்கு ஏதாவது.