பதிப்புரை கவிஞர் வாணிதாசனால் தமிழாக்கம் செய்யப்பட்ட விக்டர் வியுகோ (Victor Hugo)வின் ஆன்ழெல்லோ’’ எனும் இந்நாடக நூல் பிரெஞ்சுப் பண்பாட்டைத் தமிழ் வழிப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்நாடகம் 1981-82ல் காதல்’ எனும் மாத இதழில் சில மாதங்கள் தொடர்ந்து வெளிவந்தது. இந்நாடகத்தின் கையேட்டுப் படியைக் காதல் அலுவலகத்திலிருந்து பெற்றுத் தற்போது நூல் வடிவாக்கியுள்ளேன். வாணிதாசன் அவர்களைத் தமிழுலகம் கவிஞராக மட்டுமே அறிந்துள்ளது. வாணிதாசன் ஒரு நாடக ஆசிரியரும் ஆவார் என்பதை இந்நூல் தமிழுலகிற்கு உணர்த்தும் என நம்புகிறேன். கவிஞரின் மறைவுக்குப்பின் (1974) வாணிதாசன் கவிதைகள்.தொ. 2’ ’ (1981), * வாணிதாசன் கவிதைகள்-தொ. 3' (1984) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. தற்போது இந்நாடக நூல் வெளிவருகிறது. தமிழுலகம் என்றும் போல வாணிதாச ளிைன் இந்நூலுக்கும் வரவேற்பும் ஆதரவும் நல்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்நூலாக்கத்திற்குத் தக்க ஆலோசனைகளை வழங்கிய பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்கட்கும் உடனிருந்து உதவிய நண்பர் திரு அரணமுறுவல் அவர்கட்கும் எனது நன்றிகள். புதுவை * a to go 23-12-1989 அரங்க. நலங்கிள்ளி
பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/5
Appearance