பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ கத்தேரினா : அந்த வழியில் விளக்கை நான் பார்த்தேன். ரொதோல் : உன் அழிவுக்கு-பாவி-நானல்லவா அடிப் L165) L- . கத்தேரினா : நீ வரவில்லையென்றால்-நான் உன்னைத் தேடி வந்திருப்பேன். கத்தேரினா : (சிறு கதவில் காதை வைத்து) பேசாதேட ஏதோ சத்தம் கேட்கிறது-ஆம் இந்தக் கதவைத் திறக்கிறார்கள்-இரு-பேசாதிரு. ரொதோல் : இந்தக் கதவா? கத்தேரினா ஆம். ரொதோல் ஐய்யோ! என்ன செய்வது சன்னலால் பாயட்டுமா? கத்தேரினா : வேண்டாம். கீழே ஆறு. ரொதோல் : இந்தக் கதவு. கத்தேரினா : என் பூஜை அறை - சரி-அதிலே நுழைந்து கொள் (கதவைத் திறக்கிறாள் - ரொதோல்போ - நுழைகிறான் - கதவை மீண்டும் அவள் மூடுகிறாள் - சாவியை எடுத்துத் தன் மார்பில் மறைத்துக் கொள் கிறாள்). - கத்தேரினா : யாரோ நடக்கிறார்கள் - நிற்கிறார்கள் - என்ன நடக்கிறது என்று கவனிக்கிறார்கள். ஐயோ கடவுளே - இது என்ன இது? ஊம் - சரி -துங்குவதைப் போல் நடிப்போம் - வருபவர்களை நான் பார்க்கக் கூடாது. (கட்டிலில் படுத்துத் தூங்குகின்றவளைப் போல பாசாங்கு செய்கிறாள். கட்டிலில் சீலைகளைத் தொங்கவிடுகிறாள். கதவு திறக்கிறது).