பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5 - கத்தேரினா-தீஸ்ப (தீஸ்ப் விளக்கோடு உள் நுழைகிறாள். திரும்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே மெல்ல நடந்து வருகிறாள். மேஜையின் மேல் இப்பொழுதுதான் நிறுத்திய விளக்கைப் பார்க்கிறாள்) திஸ்ப் : ஊம். விளக்கு இன்னும் புகைகிறது. (திரும்பிக் கட்டிலைப் பார்க்கிறாள். கட்டிலினருகில் சென்று சீலையை விலக்குகிறாள்.) அவள் தனியாகத் தான் இருக்கிறாள்! தூங்குவதாகப் பாசாங்கு செய் கிறாள். (அறையில் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்து) இது அவள் கணவன் அறை! (மூடியிருக்கிற மற்றொரு அறையைப் பார்த்து) இங்குக்கூட ஒரு கதவு இருக்கிறதோ! (கத்தேரினா எழுந்து உட்கார்ந்து என்ன செய்கிறாள் என்பதைக் கவனிக்கிறாள்) கத்தேரினா : இது என்ன இது? தீஸ்ப் : இதுவா- இது சர்வாதிகாரியின் வெள்ளாட்டி சர்வாதிகாரியின் மனைவியின் திருட்டை விளக்கு கிறாள்; அவ்வளவுதான். கத்தேரினா : கடவுளே! திஸ்ப் : என்ன என்றா கேட்கிறீர்கள். ஒரு நாடோடி, நாடகக் கணிகை - பணத்திற்காகத் தன் கலையை உடலை விற்கும் பேய் என்றெல்லாம் நீங்கள் என்னை நினைக்கலாம் - கூறலாம். அந்த உதவாக்கரை யினிடத்தில்தான் பெரிய சீமாட்டி - மணமானவள் மற்றவர்கள் மதிப்பிற்குரியவள். பேரும்: புகழும்