பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ உடையவள் சிக்கிக் கொண்டாள். அந்த ஒழுக்கமற்ற வளிடத்தில் - அவள் கைகளில் - அவள் கூரிய நகத்திற். கிடையில் - பெரிய இடத்துப் பெண் - செல்வத்திலே புரண்டு செல்வத்திலே வளர்ந்தவள் சீரும், சிறப்பு முடைய ராணி - அகப்பட்டுக் கொண்டாள். அந்தப் பேதை அவளை - துண்டு துண்டாகப் பிய்க்கவோ . சாவடிக்கவோ முடியும் - பெரிய இடத்துப் பெண் களாம்-ஆம் பெரிய இடத்துப் பெண்களெல்லாம். இப்படித்தான் வெளிக்குப் பெரிய இடம் - உள்ளே நாற்றம் வீசும் சேற்றுக்குட்டைகள் - மற்றவர் கண். களுக்கு எதுவும் தெரியாதென்பது அவர்கள் நினைப்பு - பணமும் புகழும் செல்வாக்கும் - தங்கள் அடாதசெயலை -ஒழுங்கீனத்தை மறைத்துவிடுமென்று: மனப்பால் குடிக்கிறார்கள் - நானா விடுபவள். என் காலின் கீழ் ஒருத்தி அகப்பட்டுகொண்டாள் ஒன்றும் தெரியாதவள் போல நடிக்கிறாள்.ஊம் - ராணியம்மா உங்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு மனவுறுதி வந்ததோ தெரியவில்லையே - கள்ளக் காதலனை இங்கே மறைத்து வைத்துக்கொண்டு ஒன்றும் தெரியாதவர்களைப் போல பேசுகின்றிரே - உங்கள் ஆணையைக் கொண்டு என்னை விரட்டி விடலா மென்று நினைக்கிறீர்களோ? ஊம் முடியாது - என்னை ஏய்க்க முடியாதம்மா, முடியாது. கத்தேரினா : என்னம்மா, இது? திஸ்ப் : மறைத்துவிட்டீர்களா? கத்தேரினா : நீங்கள் ஏமாற்றப்பட்டீர்கள். திஸ்ப் : நானா? ஏன் பொய் சொல்லுகிறீர்கள். இங்கு இருந்தானே.-அதோ நீங்கள் இருவரும் இருந்ததை அந்த நாற்காலிகள் இன்னும் கூறுகின்றனவே! ஏன் மறைக்கிறீர்கள். பெரிய இடத்திலெல்லாம் உண்மை யைக் காணமுடியாது போல் இருக்கிறது: என்ன