பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5& விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ ஒரு ஆள்-சீ வெட்கக்கேடு. நான் சர்வாதிகாரியின் ஆசை நாயகி வெள்ளாட்டி. நீங்கள் அவர் மனைவி உங்களை அம்பலப்படுத்தி விடுகிறேன். கத்தேரினா : ஐயோ கடவுளே-என்ன இது... தீஸ்ப் எங்கே அவன்? கத்தேரினா : ufrif? தீஸ்ப் : அவன்தான்-உன் ஆசை நாயகன். கத்தேரினா : நான் தனியாகவே இருக்கிறேன். இங்கு வேறு யாருமில்லை. உண்மையாகச் சொல்கிறேன். நான் தனியாகவே இருக்கிறேன். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்பதே விளங்கவில்லை. நீங்கள் யார்-ஐய்யோ ஏதேதோ பேசுகிறீர்களே. நான் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்? இவ்வளவு .ே கா. ப மாக-ஆத்திரப்பட்டுப் பேசுகிறீர்களே. அதனால் வரப்போகும் நன்மைதான் என்ன? திஸ்ப் : நன்மையா? நன்மை உண்டு. உங்களுக்கு அதில் ஐயமா-பெரிய இடத்தார்-பக்திமான்கள் - இவர்கள் பேச்சை நம்பமுடியாது. பொய்யும் புளுகும்தான் அவர்கள் வாயில் வரும். நன்மை இல்லாமலா இவ்வளவு ஆத்திரப்படுகிறேன். நீங்கள் ராணி-நான் நாடோடி. எனக்கென்ன அதைப்பற்றி பயமில்லை. எங்கே அந்த மனிதன் காட்டு. இது மிகக் கேவல மானது ஏதோ ஒன்றுமறியாதவர்கள் போல இன்னும் நடிக்கிறீர்களே. கத்தேரினா ஐய்யோ கடவுளே-இது என்ன இது... கடவுள்மேல் ஆணையாகச் சொல்கிறேன் என்னை நீங்கள்... - - திஸ்ப் : எனக்குத்தெரியும் - இங்கே ஒரு கதவு இருக்கிற தென்று, நிச்சயமாக அவன் அங்கேதான்ட -