பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் - 5勢 கத்தேரினா : அது என் பூஜை அறை - வேறொன்று மில்லை. அங்கு யாருமில்லை. சத்தியமாகச் சொல்லு கிறேன். அங்கு யாருமில்லை. என் விரோதிகள் யாரோ உங்களை ஏமாற்றிவிட்டார்கள். நான் தனியாக மற்றவர் கண்களுக்குத் தென்படாமல் மறைந்து வாழ்கிறேன். இது உங்களுக்குத் தெரியாதா? - - திஸ்ப் : அதோ... கத்தேரினா : சத்தியமாகச் சொல்கிறேன். அது என் பூஜை அறை, கடவுள் வழிபாட்டுப் புத்தகங்களும் கடவுள் சிலைகளும்தானே அங்கு இருக்கின்றன. திஸ்ப் : தெரியும்...எங்கே அவன்? சொல். கத்தேரினா : சத்தியமாக இங்கு யாரும் மறைந்து கொண்டு இருக்கவில்லை. என்னை சூழ்புங்கள். தீஸ்ப் : வாய்தான் பொய் சொல்லுகிறது. கத்தேரினா : ஐய்யோ தீஸ்ப் : எதற்காக இன்னும் பயித்தியக்காரத்தன மாக பொய் சொல்லுகிறீர்கள். அதோ உங்கள் உள்ளத்தை-குற்றம் நிறைந்த உள்ளத்தைப் பயந்த உள்ளத்தை உங்கள் தோற்றம் விளக்கிக் காட்டுகிறது. நீங்கள் இன்னும் மறைக்கப் பார்க்கிறீர்கள். இல்லை என்பதை உண்மையானால் கூச்சலிடுங்கள். கோபப் படுங்கள். குற்றமற்றவர்களாயிற்றே எதோ நடக் கட்டும் பார்ப்போம். - ..~ - - (கீழே விழுந்துகிடந்த போர்வையைப் பார்க்கிறாள். ஒடிஎடுக்கிறாள்). ஊம் பார்த்தீர்களா-இதோ அவன் போர்வை இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள். கத்தேரினா : கடவுளே! . - தீஸ்ப் : இதுபோர்வை அல்ல். வந்த மனிதனின் போர்வை அல்ல. ஏன் அப்படித்தானே சொல்வீர்