பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் ஆன்ழெல் : உண்மையாகவா-பார்த்தாயா. நான்முன்னரே உன்னிடம் சொல்லவில்லையா - என் வாழ்வு பல வசதிகள் இருந்தும் பயங்கரமானது. நாளை உயிரோடிருப்பேனா என்பது எனக்கே தெரி யாது’’ என்றெல்லாம் உன்னிடம் கூறினேனே. நீயே தெரிந்துகொள். இந்தச் செய்தியை உனக்கு யார் சொன்னது? தீஸ்ப் : அறிமுகமில்லாத ஒருவன் இதைச் சொல்லித் தன்னைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டான். சரியென்று அவனை அனுப்பி விட்டேன். - ஆன்ழெல் : தவறிவிட்டாய். சரியென்று சொல்வி அவனைப் பிடித்துக் கொண்டல்லவா இருக்க வேண்டும். நீ எப்படி கோட்டையின் உள்ளே நுழைந்தாய். தீஸ்ப் : அந்த மனிதன் என்னை அழைத்து வந்தான். மொலினோ பாலத்தினருகிலிருக்கிற சிறிய கதவைத் திறந்து கொண்டு வந்தோம், - - - ஆன்ழெல் : இங்கெல்லாம் எப்படி வந்தீர்கள்? திஸ்ப் : நீங்கள் சொடுத்த அந்த வேலைப்பாடமைந்த. சாவியைக் கொண்டுதான். - - ஆன்ழெல் : இந்த அறைக் கதவுகளைத் திறக்கலாம் என் றெல்லாம் உன்னிடம் சொன்னதாக நினைவில்லையே திஸ்ப் நீங்கள்தானே நேற்றுச் சொன்னீர்கள். இந்தச் - சாவியைக் கொண்டு இந்த அறை வரையில் திறக்கலா, மென்று. ஆன்ழெல் : (அங்கிருந்த போர்வையைப் பார்த்துவிட்டு) இது என்ன இந்தப் போர்வை? - - திஸ்ப் : இங்கு வருவதற்காக அந்த மனிதன் இந்தப் போர்வையைக் கொடுத்தான். இன்னும் ஏதோகூட.