பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 67 கோமானே! போவோம் வாருங்கள் . கத்தேரினா : (அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டே) இது என்ன கனவா! களம்-3 மூன்றாம் நாள் காட்சி-1 (கத்தேரினாவின் அறை - கட்டிலின்மேல் பட்டுச் சீலைகள் கட்டிலை மறைத்துக் கொண்டு தொங்கு கின்றன). ஆன்ழெல்லோ - இரண்டு பாதிரிகள் ஆன்ழெல் : (இருபாதிரிகளில் ஒருவரைப் பார்த்து) பது நகர சய்ன்த் அன்துவான் மாதாக்கோயில் பாதிரி அவர்களே கோயில் எங்கும் கறுப்புச் சீலைகள் தொங்கவிட ஏற்பாடு செய்யுங்கள் - உட்னே இரண்டு மணிக்கெல்லாம் தொங்கவிடப்படட்டும். ஒரு பிரபல ஆன்மா அமைதியடையப்போகிறது. அதற்கு வேண்டிய பூஜை முறைகள் தயார் ஆகட்டும். ராணி யின் சாவுக்கு ஏற்றப்படுவதைப் போல முன்னுறு. விளக்குகள் ஏற்றுங்கள். அறுநூறு ஏழைகளுக்குத் தலை ஒன்றுக்கு ஒரு பொன் நாணயமும், ஐந்து ஆறு பிரான்க் மதிப்புள்ள ஒரு வெள்ளி நாணயமும், வழங்குங்கள். சீலையில் எல்லாம் மலிப்பியரி ஆன்ழெல்லோலின் குடும்பச் சின்னங்களும் பிரக தானி (அவர் மனைவி கத்தேரினா குடும்பப் பெயர் சின்னங்களும் இருக்கவேண்டும். - பாதிரி : அப்படியே ஆகட்டும் - செய்கிறேன்.