பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களம்-1 முதல் நாள் இரவில் நடக்கப் போகும் விழாவிற்காகத் தோட்டமெங்கும் விளக்கேற்றப் பட்டுள்ளது. தோட்டத்தின் வலப்புறம் விளக்குகளும், இசை களும் கிறைந்த கோட்டை தோட்டக்கதவு. அங்கு விழாவிற்கு வந்தவர்கள் நடமாடுகின்றனர். கதவருகில் நீண்ட கல்லாலான இருக்கை (கல் பெஞ்சு). இடப்புறம் மற்றொரு நீண்ட கல்லாலான இருக்கை. அதன் மேல் ஒரு மனிதன் தூங்கிக் கொண்டிருக்கிறான். தோட்டத்தினுள் மரங்களி னிடையில் பது என்ற அந்நகரத்தின் தோற்றம் மெல்லிய கிழலுருவில் தோன்றுகிறது. காட்சி : 1 தீஸ்ப் : விலையேறப்பெற்ற ஆடம்பர உடையோடிருக் கிறாள். ஆன்ழெல்லோ மலிப்பியரி : பொன்னால்ஆன நகடித்திரச் சின்னங்கள் பொலிய சிற்றரச உடையோடு காட்சி யளிக்கிறான். ஒமாதேய் : நடுத்தர உடை, தலைமாட்டில் ஒரு கித்தா ரோடு (இசைக்கருவி) நீண்ட இருக்கையில் துயில் கிறான் , z திஸ்ப் : ஆம்-நீங்கள்தான் இங்குத்தலைவர் கோமானே! நீங்களே வேனிஸ் நகர முதல் நீதிபதி சர்வாதிகாரி: