பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 69 சாமிகாள்-இங்கு நீங்கள் யாருக்கு அவஸ்த்தை கொடுக்கப்போகிறீர்கள் என்பதை யாராக இருந் தாலும் சரி நீங்கள் வெளியிடக்கூடாது. தப்பித்தவறி வாய் திறந்தால், தலை உருளும்-நினைவிருக்கட்டும். ஊம்! போங்கள். (இருவரும் பூஜை அறையில் நுழைகிறார்கள். வேலைக்காரன் தீஸ்பை அழைத்துவருகிறான்.) х திஸ்ப் : (வேலைக்காரனைப் பார்த்து) எதற்காக அரசர் என்னைத்தேடுகிறார் தெரியுமா? - வேலைக் : எனக்குத் தெரியாது அம்மா. (வேலைக்காரன் போகிறான்) காட்சி-2 தீ ஸ்ப்-தனியாக - அட இந்த அறையா! மீண்டுமா இந்த அறையை நான் பார்க்கவேண்டும். கோட்டையே ஒருமாதிரி சாவீடு போலல்லவா இருக்கிறது. சர்வாதிகாரி எதற்காக என்னை அழைத்தார். சரி நமக்கென்ன அதைப்பற்றி-சீ-இந்தக் கதவைப் பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இந்தக் கதவின்பின்தானே அவன் ஒளிந்திருந்தான் -அவனா-வேறு யாராவதா? உண்மை எனக்கு விளங்கவில்லையே! அந்தத் துப்பறிபவனை நான் அதற்குப் பிறகு பார்க்க முடியவில்லை. இது என்ன எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. ரொதோல்போதானா அன்று இந்த அறையில் இருந்தவன். என் உயிராக-ஒளியாக- வாழ்வாக எண்ணி எண்ணி ஏங்கும் அந்த ரொதோல்போவா -அப்படியானால் நான் உண்மையைச் சர்வாதி காரியிடத்தில் கூறி விடவேண்டியதுதான். ஆம் அப்படித்தான் அவர்களைப் பழி வாங்கவேண்டும். இல்லை என்றால் என் மனம் அமைதி 5 س-مه :