பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ உள்ளம். நீ எப்படி நினைக்கிறாய். அதில் இருப்பதைக் கொண்டு. நகரம் முழுதும் தேட ஏற்பாடு செய்து விட்டேன். அவன் தப்பிக்கமுடியாது. நீ என்ன சொல்கிறாய் தீஸ்ப்? உன் கருத்தென்ன? திஸ்ப் : தேடுங்கள் - ஆன்ழெல் : நீயும் உன் அண்ணனும் தவிர மற்றவர்கள் யாரும் என் அரண்மனையில் நுழையக் கூடாதென்று உத்திரவிட்டுள்ளேன். வேறுயாராக இருந்தாலும் சிறை செய்து அழைத்துவர உத்திரவு-அதற்குள் அவளை ஒருகை பார்க்கிறேன். திஸ்ப் : என்ன யாரை? ஆன்ழெல் : அவளைச் சாவடித்து வஞ்சம் தீர்த்துக் கொள்ளப் போகிறேன். - திஸ்ப் : யார் - ராணி - உம் மனைவியையா? ஆன்ழெல் : யாவும் ஏற்பாடாகி விட்டது. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்-கத்தேரினா பிரகதானியின் தலைகீழே உருளும். - திஸ்ப் : தலையையா வெட்டப்போகிறீர்கள்? ஆன்ழெல் : அதே அறையில். திஸ்ப் : அந்தப் பூஜை அறையிலா? - ஆன்ழெல் : கேள்-மாசுபடிந்த என். கட்டில் பினக் கட்டிலாகட்டும். அவள் இறக்கவேண்டியதுதான். எந்தக் கண்ணிரும், வேண்டுகோளும் என் முடிவை மாற்ற முடியாது. என் உயிர்த் தோழர்கள் மண்டி யிட்டு மன்றாடினால்கூடப் பொறுக்கமாட்டேன். அவள் தலை உருளவேண்டியது தான் தீஸ்ப். நான் அவளை வெறுக்கிறேன். குடும்பக் கட்டாயத்திற். காக நான் அவளை மணந்து கொண்டேன். நான் அப்பொழுது அந்தத் திருமணத்தைப் பற்றி எண்ணிப்