பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ மக்களுக்குத் தெரிந்துதானே போகும். வேறு வகை யில் இதைச் செய்தால் என்ன? கொலைகாரன் என்றைக்காவது ஒரு நாள் சர்வாதிகாரியின் மனைவி ஏதோ கள்ளக் காதல் புரிந்தாளாம்-அதற்காக அவளைக் கொல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. நான் கொன்றேன் என்று சொல்லக் கூடுமல்லவா? ஏன் அந்த வீண்தொல்லை. - காதும் காதும் வைத்த மாதிரி வேறு வகையில் நடத்தி விட்டால்... ஆன்ழெல் : ஆம் நல்லயோசனைதான். - நஞ்சு - மிக நல்லதுதான். அது என்னிடம் இல்லையே. திஸ்ப் : என்னிடம் இருக்கிறது. ஆன்ழெல் : எங்கே?. திஸ்ப் : என் வீட்டில். ஆன்ழெல் : என்ன நஞ்சு? :திஸ்ப் : கொடிய நீஞ்சு - நான் தான் உங்களிடத்தில் முன்பு கூறினேனே? என் நண்பர் எனக்காகப் பரிசு வழங்கிப் பெட்டியில் அனுப்பி வைத்தது வீட்டில் இருக்கிறது-ஒரே ஒரு வினாடி-திர்ந்துவிடும். ஆன்ழெல் : ஆம் அதுதான் சரி - நல்லயோசனை-அது . நம்மோடே மறைந்து விடும்; வீண் பேச்சுக்கு இடம் இருக்காது. இதோ.பார் தீஸ்ப். உன்னைத் தவிர மற்றவர்களின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை. என் பெயர், புகழ் - நிலை - மானம் - காப்பாற்றப்பட வேண்டுமானால் நீ சொன்னதுதான் நல்ல யோசனை. . எப்படி இவள் இறந்தாள் என்பதே யாருக்கும் தெரியாத புதிராக இருக்கும். இந்தச் சாச்சடங்கு யாருக்கு என்பதே இன்னும் மக்களுக்குத் தெரியாது. கோட்டையிலே யாரும் அறியாமல் அடக்கம் செய்து விடலாம். வெளிக்கு ஒன்றும் தெரியாது. ஆம்