பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 77 அதுதான் சரியான யோசனை - போய் அந்த நஞ்சை எடுத்துவரச் சொல். திஸ்ப் : எனக்குத்தான் அந்த நஞ்சு இருக்குமிடம் தெரியும்; நானே சென்று எடுத்துவருகிறேன். ஆன்ழெல் : போ-விரைவில் வந்துவிடு, நேரம் போகக் கூடாது! (தீஸ்ப் போகிறாள்) ஆம் அதுதான் சரி. இருட்டோடு இருட்டாக இந்தக் கொலையும் அடங்கிவிடும். (பூசை அறை திறக் கிறது. பாதிரி கையைக் கட்டிக்கொண்டு தலை தாழ்த்தி வெளியே வருகிறார். ஆன்ழெல்லோ அவரைப் பார்த்து) சாகத் தயாராகிவிட்டாளா? பாதிரி ஆம் அரசே! - (பாதிரி போகிறார். கத்தேரினா பூஜை அறைக் கதவை எட்டிப் பார்க்கிறாள்) களம்-4 ஆன்ழெல்லோ-கத் தேரினா கத்தேரினா : எதற்குத் தயார்? - ஆன்ழெல் : சாவதற்கு. கத்தேரினா : சாவதா? உண்மையாகவா- மெய்தானா, ஏன்? எதற்காக? ஐயையோ! ஊகும் மாட்டேன்! . வேண்டாம்! வேண்டாம்! அரசே! ஆன்ழெல் : ஏன் சாவப் பயமாக இருக்கிறதா? கத்தேரினா சாவ வேண்டுமா? இதற்குள்ளாகவேவா? இன்னும் எனக்குச் சாகிற வயதாகவில்லையே. நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன் சாவதற்கு: அரசே வேண்டாம்; வேண்டாம். வாழ்க்கையின்