பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ நீங்கள் விரும்பினால் சாவையோ, வாழ்வையோ மக்களுக்கு அளிக்கமுடியும். விடுதலை அல்லது சிறை வாழ்வு உங்கள் கையில் தான் இருக்கிறது. எங்கும் உங்களைப் பார்ப்பவர்கள் வேனிஸ் குடியரசின் முகத்தையும் அதன் வலிமை மிகுந்த தோற்றத்தையும் பார்க்கின்றனர். தாங்கள் தெருவில் போகும்போது கோமானே-சன்னல்கள் அடைத்துக் கொள்கின்றன. வழிப்போக்கர்கள் தங்கள் கண்ணிற்குப் படாமல் மறைந்து விடுகின்றனர். வீடுகள்-வீட்டின் ஒவ்வொரு பகுதியும் நடுங்குகின்றன. இப்பது மக்கள் தங்கள் முன் துருக்கி நாட்டானைக் கண்டு நடுங்குகின்ற கான் ஸ் டாட்டி நோபள் மக்களைப் போலல்லவோ நடுங்கு கிறார்கள். பாவம் ! அவர்கள் அழகும் ஆண்மையான தோற்றமெல்லாம் எங்கோ ஒடுங்கி விடுகின்றது. ஆம்! அதில் சிறிதும் ஐயமில்லை! நான்பிரேசியாவிற்குச்சென் றிருக்கிறேன். அதுவும் இந்த வேனிஸ் குடியரசின் கீழ்ப்பட்டதுதான். இருந்தாலும் கூட இந்தப் பதுவை நடத்துவதுபோல பிரேசியாவை வேனிஸ் நடத்துவ தில்லை. பிரேசியா சற்றுத் தன்மானமுள்ள நாடு. அடிக்கடி எதிர்த்துக்கொள்கிறது. வேனிஸ் அதைத் தண்டிக்க முற்பட்டால் பிரேசியா சீறுகிறது . ஆனால் பாவம்-இந்தப்பது-அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறது, வெட்கக் கேடானதுதான்-என்ன செய்வது? மக்கள்அப் பேர்ப்பட்டவர்கள். தன்மானமற்றவர். போகட்டும். நீங்கள் இங்குள்ளோருக்கெல்லாம்தலைவர். எனக்கும் தலைவர் என்று கூட நினைத்திருக்கிறீர்கள். கோமானே! கோபித்துக் கொள்ளாதீர்கள். உண்மை தானே! அரசியலைப்பற்றியல்ல. உங்களைப் பற்றியே நான் கூறுகிறேன். நீங்கள் ஒருமாதிரி தனிப்பட்டவர், உங்களைப்பற்றி எனக்கு ஒன்றும் அதிகமாகத் தெரி யாது. என்மேல் உங்களுக்குக் கொள்ளை கொண்ட ஆசை. ஆனால் உங்கள் மனைவிமீது உங்களுக்குச் சந்தேகம். ஏன் அப்படித்தானே?