பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.32 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ எனக்கொன்றுமில்லை. ஆனால் நீ விரைவிலே போய்விடு. சர்வாதிகாரி வந்தாலும் வருவார். ஆம் நீ போய்விடு. என் அன்பே-விரைவாக இங்கிருந்து போய்விடு. - ரொதோல் : கத்தேரினா! என் அன்பே! நீ பயப்படாதே சர்வாதிகாரி இப்பொழுது இங்கில்லை. மொவினோ பாலத்திற்கு அருகில் இருக்கிறார். விலங்கிடப்பட்ட மக்களையெல்லாம். ஏதோ வினவிக்கொண்டிருக் கிறார். எனக்குப்பயமாகவும் சந்தேகமாகவும் இருக் கிறது-இன்று கோட்டையும் நகரமும் ஏதோ ஒரு மாதிரி மாறுதலாகவே காணப்படுகிறது. என் கண்ணே கத்தேரினா-படைவீரர்கள் நகரத்தில் இங்குமங்கும் ஒடிக்கொண்டிருக்கிறார்கள். கோவில் எங்கும் கருப்புத்துணி தொங்கவிடப்பட்டிருக்கிறது. சாவுமணி அடிக்கிறது. யாருக்குச் சாவு எனக்குத் தெரிய வில்லையே. உனக்காவது தெரியுமா? கத்தேரினா : தெரியாது. ரொதோல் : கோவிலுக்கு உள்ளே போகமுடியவில்லை. நகரம் முழுமையும் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறது. ஏதோ குசுகுசு என்று எல்லோரும் பேசுகிறார்கள். நிச்சயமாக யாரோ சாகப் போகிறார்கள். அதில் ஒன்றும் தடைஇல்லை. எங்கே? யார்? அதுதான் எனக்குப் புரியவில்லை. இங்கொன்றுமில்லையே. அவ்வளவுதான் எனக்குத் தேவை. உனக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாதே-உனக்கொன்றும் ஐயமில்லையே என் கண்ணே-காதலே' சொல்சொல்லேன் . . . . . . . கத்தேரினா : இல்லை. -- ரொதோல் : மற்றதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அந்த இரவு பயங்கரம் எப்படி மாறினது. போகட்டும் எப்படியோ தப்பித்துக்கொண்டோம். அதைப்பற்றி