பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 83 எனக்கு இன்னும் ஒன்றுமே விளங்கவில்லை போகட்டும் கத்தேரினா. அந்தக் கயவன்-ஒற்றன் ஒமோதேய் இனி உனக்குத் தொல்லைதரமாட்டான். நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை. கத்தேரினா ; நீ நம்புகிறாயா ரொதோல் : அவன் செத்தொழிந்தான். உண்மைதான். இதோ என்னைப்பார். என்ன உன்முகம் வாட்டமாக இருக்கிறதே. என்ன-என்ன கவலை உனக்கு கத்தேரினா? நீ எதையும் என்னிடத்தில் ம்றைக்க மாட்டாயல்லவா? உனக்கொன்றுமில்லையே, ஏதாவ தென்றால் சொல். என் உயிரைக்கொடுத்து உன்னை. மீட்கிறேன். . . w - கத்தேரினா ஒன்றுமில்லை. சத்தியமாகச் சொல்கிறேன் எனக்கொன்றும் நேரவில்லை. உன்னால்தான் நான் பயப்படுகிறேன். நீ போய்விடு ஆம். அதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது. - ரொதோல் : நான் வரும்போது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? கத்தேரினா : ஐய்யோ கடவுளே-நீ பேசாது அமைதி யாய் இரேன் ரொதோல்போ. எனக்கு ஒன்றும் இல்லை. சிறிதுகூடக் கவலை இல்லை. அதற்கு மாறாக நீ பாடிய அந்தப் பாட்டை-பாட்டின் இசையை எண்ணிக்கொண்டே இருந்தேன்-இதோ பார் என் கித்தார் (இசைக்கருவி) இங்கே இருக்கிறது பார்த்தாயா - ரொதோல் : நான் உனக்குக் கடிதம் எழுதினேன். ரெழினெல்லாவைச் சந்தித்து அவளிடம் கொடுத்த னுப்பினேன் அது உனக்கு வந்து சேர்ந்ததா? அது எங்கும் தவறிவிடவில்லையே. வந்து சேர்ந்ததா?