பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் - 85 கத்தேரினா : எதற்காக அவர்கள் உன் எழுத்தைப் பார்க்கவேண்டும்-எனக்கென்னவோ அது கூடா தென்று படுகிறது. பெண்கள் ஏதாவது சொன்னால் அதில் நன்மையே இருக்கும் தெரிகிறதா?-நீ வந்ததற் காக-பார்த்ததற்காக- பேசியதற்காக-இவ்வளவு நேரம் இருந்ததற்காக நன்றி-உன்னைப் பார்க்க வேண்டிய ஆசை இருந்தது பார்த்துவிட்டேன்-பார்த் தாயா நான் எவ்வளவு அமைதியாக இருக்கிறேன். இன்பமாக-பூரிப்போடு இதோ உன் கடிதம்-இசைக் கருவி-வேறு எனக்கென்னவேண்டும். ரொதோல்போ இனி நீ போகலாம்--நீ போனால்தான் எனக்கு இன்பமும், அமைதியும் ஏற்படும்-இந்தா இன்னும் ஒன்றே ஒன்று. ரெrதோல் : என்ன? - கத்தேரினா : ரொதோல்போ நான் இதுவரையில் உனக்கு எந்த அனுமதியும் கொடுத்ததில்லையல்லவா. ரொதோல் : ஆம். கத்தேரினா : இன்றைக்கு நானே தருகிறேன்-இந்தா, (இதழைக் காட்டுகிறாள்.) ரொதோல் : (அவளைத் தன்கையால் வாரியணைத்து) இன்றே நான் கொடுத்துவைத்தவன். கத்தேரினா : நீதான் உண்மையில் பாக்யசாலி. சரி-போ ரொதோல்போ (ரொதோல்போ போகிறான்.) 口