பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களம்-7 (கத்தேரினா தனியாக) ஓடிவிடலாம்-அவரோடு ஓடிவிடலாம்! அப்படிக்கூட நான் நினைத்தேன். ஒரு கணம். அது பயனற்றது. அப்படி நான் செய்திருந்தால் அவர் வீணாகவல்லவா மாட்டிக்கொண்டிருப்பார்? அவருக்கு ஒன்றும் வரக் கூடாது. எந்த ஒற்றனும் அவரை விலங்கிடக்கூடாது. எப்படியாவது அவர் பிடிபடாமல் இன்றுமாலை சென்றுவிடவேண்டும். ஆம் கடவுளே, உன்னை வேண்டுவது ஒன்றேதான். அவர்மேல் யாரும் ஐயப்படக் காரணமில்லை - கடவுளே அவரைக் காப்பாற்று-காப்பாற்று (ரொதோல்போ சென்ற கதவருகில்போய் காதுகொடுத்துக் கேட்கிறாள்.) - இன்னும் என் அன்பர் காலடிகள் கேட்கின்றன. செல்கிறார்.சென்றுகொண்டே இருக்கிறார். சென்று விட்டார். கடவுள் அவரைக்காக்கட்டும். (பெரிய கதவு திறக்கிறது.) கடவுளே!. - (ஆன்ழெல்லோவும்-தீஸ்பும் வருகிறார்கள்.) 口 களம்-8 கத்தேரினா-ஆன்மெல்லோ-திஸ்ப் கத்தேரினா : (தனியாக)-யார் இந்தப்பெண்? அன்று இரவு வந்தவளா? - - - . . . . . ஆன்ழெல் ராணி என்ன? முடிவுக்கு வந்துவிட்டாயா? கத்தேரினா ஆம் அரசே!