பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் 87 ஆன்ழெல் : சாவு! அல்லது அந்தக் கடிதம் எழுதின வனைக் காட்டிக்கொடு. அவன் யார் என்று சொல்லு கிறாய் அல்லவா? - கத்தேரினா : அந்த முடிவுக்கு வரவில்லை. அரசே! தீஸ்ப் : (தனியாக) கத்தேரினா! நீயல்லவா உண்மையில் தைரியசாலி சிறந்தவள். (ஆன்ழெல்லோ தீஸ்ப்புக்குச் சாடைகாட்டுகிறான் திஸ்ப் ஆன்ழெல்லோவிடம் ஒரு வெண் சீசாவைக் கொடுக்கிறாள். அதை மேஜைமீது அவன் வாங்கி வைக்கிறான்.) . - - ஆன்ழெல் அப்படியானால் நீ இதைக் குடிக்க உடன் படுகிறாய் அல்லவா? கத்தேரினா : நஞ்சா? ஆன்ழெல் ஆம் ராணி! ஆம்! கத்தேரினா : நஞ்சுண்டால் அந்த மனிதனைச் சிறை செய்யமாட்டீர்களே! - - ஆன்ழெல் : உன் முன்னோர்களில் ஒருவர் அவர் மனைவியை இதே தவறுக்காக இப்படித்தான் செய் திருக்கிறார். - . . . . - கத்தேரினா : அவர்களைப்பற்றியெல்லாம். பேச வேண் டாம். இறந்தவர்களைப் பற்றிப் பேசுவது சனத் தொழில், நஞ்சை எடுத்து வந்துவிட்டீர். நான் குற்றவாளியா? இல்லை ஒருநாளும் குற்றவாளியல்ல. நான் அதை இப்பொழுது உம்மிடம் எண்பிக்க வர வில்லை. உமக்கு என்னிடம் நம்பிக்கை இல்லை. உம்மைப் போல் நான் பொய் பேசுபவளல்ல. இது வரையில் உம்மைக் கணவன் என்று மதித்துதான் ஒழுங்குமீறாது நடந்து வந்தேன். நீர் கணவனாக இருப்பதற்கேற்றவரல்ல என்பது உம் செய்கையில்