பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் வாணிதாசன் z ஆன்ழெல் : அவள் என்பது மட்டும் என்ன? உன்மீது கூடத்தான் சந்தேகம். திஸ்ப் : சந்தேகமா... என்மீதா...கடவுளே அதை நீங்கள் என்னிடம் கூறவேண்டாம். கூறக்கூட உங்களுக்கு உரிமை கிடையாது. ஏனென்றால் நான் உங்களுக்குச் சொந்தமானவளல்ல. இங்கு உங்களுக்கு ஆசைநாயகி யாக இருக்கிறேன். சர்வாதிகாரியின் சரசாங்கியாக இருக்கிறேன். அவ்வளவுதான். ஆன்ழெல் : இந்த விழா எவ்வளவு இன்பமாக இருக்கிறது பார்த்தாயா? திஸ்ப் : நான் ஓர் ஏழை நடனமாது' என்னைச் சட்ட சபை உறுப்பினர்களுக்கு இன்பமூட்ட விழாக்களிலே நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என் ஆடல் பாடல்களால் அவர்களுக்கு இன்பமூட்டுகிறேன். அதுவும் வரவர முடியவில்லை. போகட்டும். ஏன் உங்கள் முகம் ஏதோ ஒருமாதிரியாக இருக்கிறது? என் முகமூடியைவிட இருண்டிருக்கிறதே உங்கள் முகம். என்ன உங்களுக்கு? நான் எவ்வளவோ விளக்குகளை யெல்லாம் துண்டி விட்டுப் பார்க்கிறேன், உங்கள் முகத்தில் படர்ந்த சோர்வு நீங்கவில்லை. உங்கள் நெற்றியிலும், கண்களிலும் துக்கச் சாயல் தோன்று கிறது. இசையோடு கூட்டி இன்பத்தை வாரி இறைக் கிறேன். உங்கள் முகத்தில் துன்பமே தோன்றுகிறது. என் இசைக்கும் கலைக்கும் உங்கள் மகிழ்ச்சியைக் காட்டி ஊக்கமளிக்காமல் இருக்கின்றீர்களே. கோமானே! எதோ-சற்று-சிரியுங்களேன்பார்ப்போம். ஆன்ழெல் : (சிரிப்பை வரவழைத்துக்கொண்டே) உன் னோடு இங்கு வந்திருக்கிறானே அந்த இளைஞன் அவன் உன் அண்ணன் என்றுதானே என்னிடம் கூறி sartrifr? - திஸ்ப் : ஆம். அதற்கென்ன இப்பொழுது: -