பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ நன்றாக விளங்கிவிட்டது. நீர் எதற்காக என்னைத் திருமணம் செய்துகொண்டீர்? என் பணத்திற்காக. என் முன்னோர்களுக்கு வேனிஸ் அரசியலில் உரிமை. உண்டு என்பதற்காக மணந்துகொண்டீர். நல்ல் பணம்- பதவி-புகழ்வரும் என்பதற்காக மணந்து கொண்டீர். ஆண்டுதோறும் நூறு ஆயிரம் (துரய்க்கா) பொன்நாணயம் வருமானம் வரும் என்பதற்காக மணந்துகொண்டீர். இல்லை என்று மறுக்க உமக்கு தைரியம் உண்டா? இந்த ஐந்து ஆண்டுகளாக இல்லற வாழ்க்கையில் நான் அடைந்த நன்மை என்ன? சொல்லுங்களேன் - எப்பொழுதும் பொறாமை படுவதும், ஐயக் கண்கொண்டு நோக்குவதும் அன்றி அன்பாக ஒரு நாளாவது பேசியதுண்டா-என் உடைந்த இதயத்திற்கு அன்புப் பசை பூசியதுண்டா? ஆறுதல்மொழி கூறியதுண்டா? மனைவி என்று நினைத்தாவது ஏதாவது சிறு அன்பின் அறிகுறியை என்றாவது எப்பொழுதாவது காட்டியதுண்டா கூறுங்களேன். நீங்கள் என்ன வேறு எந்தப் பெண் முகத்திலும் விழிக்காமல் விரதமா இருக்கிறீர்கள். அடடா! எத்தனை வெள்ளாட்டிகள் இச்சைபோல அவளோடு இவளோடு எல்லாம் திரிவது. கண்டவளோடெல்லாம் கனிமொழிபேசுவது, களி யாட்டம் ஆடுவது, நீங்கள் செய்வதில் தவறு கிடையாது. ஆண்இனமே எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதானே சமுதாயச்சட்டம். சிடுசிடு என்று இருப்பது-எதைக் கேட்டாலும் பதில் சொல்வ தில்லை. நானும் எங்கும் போகக்கூடாது. கட்டுக் காவலெல்லாம் எனக்கு. கட்டு இல்லாமல் திரிவது உமக்கு. இதுதான் கணவன் மனைவியை நடத்து கின்ற முறையோ, வாழ்க்கையில் மனைவிக்கு அளித் கும் இன்பங்கள் இவைதாமோ? உம் 5,65ಣು பற்றி-பாட்டனைப்பற்றி முன்னோரைப்பற்றி அவர் கள் விரப் பிரதாபத்தைப் பற்றி எல்லாம் பேசுவது.